Home சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 


அந்த எறும்பின் பெயர் சுறுவன். சுறுவனால் சும்மாவே இருக்கமுடியாது. எப்பொழுதும் ஊர்ந்து சென்று உணவுப் பொருளைத் தேடியவாறே இருக்கும். உணவு தானியம் எதுவும் கிடைத்தால் அதை வாயால் பற்றிக்கொண்டு சிரமம் பாராமல் இழுத்துக் கொண்டு வந்து தன்னுடைய புற்றில் சேர்த்து வைக்கும்.
அன்றும் அப்படித்தான் சுறுவன் எறும்பு இயங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய இருப்பிடத்தை விட்டு அது நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தது. அதன் மூக்கில் அரிசி வாசம் வீசியது.
‘ஆகா...’ அருகில்தான் அரிசி உள்ளது என்று எண்ணியவாறே விறுவிறு என ஊர்ந்தது. ஆனால் சுவர் தடுத்தது.
அந்தச் சுவரின் உச்சியில் ஒரு பொந்து இருந்ததை அது கண்டுபிடித்தது. சற்றும் அசரவில்லை. விரைவாகச் சுவரில் ஏறிப் பொந்துக்குள் நுழைந்தது. பொந்தை விட்டு வெளிப்பட்டபோது, ஓர் அறையைக் கண்டது. அங்குதான் அரிசி குவிக்கப்பட்டு இருந்தது.


மகிழ்ச்சியில் அரிசிக் குவியலில் குதித்தே விட்டது சுறுவன். மலை போல் அரிசி குவிந்து இருந்தாலும், அந்த ஒற்றை எறும்பால் ஒரே ஓர் அரிசையைத்தானே இழுத்துச் செல்ல முடியும். ஓர் அரிசியைக் கவ்விப் பிடித்தது. இழுக்க ஆரம்பித்தது. அந்த எறும்பின் எடையை விடவும், அந்த அரிசியின் எடை அதிகம். ஏன் அளவும் கூட அதிகம்.
அதெல்லாம் பொருட்டல்ல, சுறுவனுக்கு! கடமையைச் செய்வது மட்டுமே அதன் கவனத்தில் இருக்கும். அரிசியைச் சிரமப்பட்டு இழுத்தபடியே ஊர்ந்தது. சில சமயங்களில் அரிசி அதன் வாயின் பிடியிலிருந்து நழுவிவிடும். ஆனாலும் அசராது. சுறுவன்’ சுறுசுறுப்புக்குப் பெயர் போனவன் ஆயிற்றே.
அங்கே மூடப்பட்டிருந்த கதவின் அடியில் சிறு துவாரம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டது. எனவே அதன் வழியே அறையைவிட்டு வெளியே வந்தது. அதற்கே அதற்கு வெகுநேரம் பிடித்தது. இன்னும் தன் இருப்பிடம் வரை இழுத்துச் செல்ல பல மணிநேரம் பிடிக்கும் என்பதைச் சுறுவன் உணர்ந்தது.
‘கடமை காலம் பார்க்காது. ஊக்கம் சிரமம் நோக்காது’ என்பார்கள் அல்லவா? அசராமல் தன் பணியைச் செவ்வனே செய்தது சுறுவன்.
இதோ, தன் புற்றை நெருங்கிவிட்டது. அப்போதுதான் அதன் அருகே ஒரு சிட்டுக்குருவி வந்து நின்றது.


“என்ன... சிட்டு. என்னையே பார்க்கிறாய். என்ன செய்தி?” என்று கேட்டது சுறுவன். “எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. நீ வைத்திருக்கும் அரிசியைக் கொடு. நான் உண்டு பசியாறுகிறேன்” என்றது.
“ஹை... இந்த அரிசியா? நான் எவ்வளவு கடினப்பட்டு, எவ்வளவு தூரம் சென்று இதைக் கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா? நீ என்னமோ கொடுத்து வைத்ததுபோல் கேட்கிறாயே. உனக்கு வேண்டியதை நீயே உழைத்து உண்” என்றது சுறுவன் எறும்பு.
சிட்டுக்குருவிக்கோ அதைக்கேட்டு ஏமாற்றமாகி விட்டது.
“நான் என்ன உழைக்காமலா இருக்கிறேன். எவ்வளவு தேடியும் எனக்கு உணவு கிடைக்க வில்லை. அதுதான், மிகுந்த பசியைத் தணித்துக் கொள்ள, இந்த அரிசியைக் கேட்கிறேன். நீ தந்தால் பசியாறுவேன். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற தமிழ்ப்பண்பாடு நீ அறியாததா? நீயும் தமிழ் மண்ணில்தானே வாழ்கிறாய்” என்றது சிட்டு.
“அட... சரியாப் போச்சுது. நாங்க மணிக்கணக்கா உழைச்சு இந்த அரிசியை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வருவோமாம். நீங்க ஒரே கொத்துல அதை அள்ளிக் கொண்டு போவீங்களாமாம். சரி... அது கெடக்கட்டும், உன்னுடைய கடும்பசிக்கு இந்த ஒத்தை அரிசி போதுமா?” என்றும் கேட்டது சுறுவன்.
“போதாதுதான் சுறுவா. ஆனால் சற்றாவது பசியைத் தணிக்கும் அல்லவா? நான் சாப்பிடட்டுமா? உன் அனுமதியைக் கொடு” என்று கேட்டது சிட்டு.
சிட்டு நினைத்தால் சுறுவனிடம் கேட்காமலேயே ஒரே கொத்தாக அரிசியை விழுங்கிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் எவ்வளவு பணிவுடன் தன் இசைவைக் கேட்கிறது என எண்ணியது சுறுவன்.


“சரி... சரி... நீயே சாப்பிடு இந்த அரிசியை!” என்றது சுறுவன்.
“நன்றி சுறுவா.. நான் உனக்குப் பதிலுக்கு தானியம் அதிகம் குவிந்திருக்கும் இடத்தைக் காட்டுகிறேன்” என்றது.
“அதெல்லாம் வேண்டாம். தானிய வாசனையை நான் நுகர்வால் உணர்ந்துகொண்டு விடுவேன்” என்றது சுறுவன்.
சிட்டுக்குருவி ஆசையுடன் அந்த அரிசியைத் தின்றது. அரிசியை விழுங்கிவிட்டு குனிந்தது. அதன் கண்களில் ஆச்சரியம். அதன் முன் நிறைய அரிசிகள் வந்து விழுந்தன. அருகிலுள்ள எறும்புப் புற்றில் இருந்துதான் சுறுவனின் தோழமை எறும்புகள் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த அரிசிகளைக் கொண்டுவந்து சேர்த்திருந்தன. அதெல்லாம் சுறுவனின் ஏற்பாடுதான்.
சுறுவனின் தோழமை எறும்புகள் காட்டிய விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போய்விட்டது சிட்டுக் குருவி.
“சிட்டு... நீயோ பசியில் தவித்தாய். ஆனால் நானோ நாளைய பசிக்காகத்தான், இன்றே சேமித்து வைக்க உழைத்தேன். இன்று உன்னுடைய பசியைத் தீர்க்க எங்கள் சேமிப்பும் உதவியது பார்” என்றது.
“சுறுவா... உனது உயிர்நேயம் என்னை வியக்க வைத்துவிட்டது. இனி நானும் உழைப்பேன். தேவைக்குப் போக சேமித்து வைத்து பசித்த உயிருக்குக் கொடுத்து உயிர் காப்பேன்” என்றது சிட்டு.
சுறுவன் மீண்டும் அரிசி வேட்டைக்குக் கிளம்பியது.ம்.

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்