Home துணுக்குச் சீட்டு - 6: தேன்... கெட்டுப் போகுமா?
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
துணுக்குச் சீட்டு - 6: தேன்... கெட்டுப் போகுமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 


# இனிப்புப் பிரியர்களே? போடுங்க.. தேன் மிட்டாய் சாப்புடுவீங்களா? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, தேன்மிட்டாய்,  தேனிலேயே செய்வதில்லை. ஆனா, இந்தச் செய்தி தேனைப் பற்றித்தான். 2015ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வாளர்கள், எகிப்தில் ஆய்வு செய்யும்போது 3000 ஆண்டுகள் பழமையான தேனைத் தோண்டி எடுத்தனர். இதில் என்ன ஆச்சரியம்னு தானே கேக்குறிங்க? அந்த 3000 ஆண்டுகள் பழமையான தேன், கொஞ்சமும் கெடவே இல்ல. ஆமாம்பா, சரியான முறையில் தேனைச் சேமிச்சி வைச்சா, தேன் கெடவே கெடாது. எப்படி??
பொதுவாக, உணவு கெடுதுன்னா, அதுக்குக் காரணம், அந்த உணவில் வளரும் கெட்ட நுண்ணுயிரிகள்தான். ஆனால், தேனில் நுண்ணுயிரி வளருவதற்கு வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு. அதுக்கு, தேனில் இருக்கும் அதீத இனிப்பு, அமிலத்தன்மை மற்றும் தேன் உருவாகும் முறை தான் காரணம். அதோட, தேனில் ஈரப்பதம் ரொம்ப்ப்ப்ப்ப குறைவு. இவ்வளவு குறைவான ஈரப்பதத்தில நுண்ணுயிரிகள், குறிப்பா பாக்டீரியா வளர முடியாது. தேன் செய்யப்படும் முறையைப் பார்ப்போம். தேனீக்கள், பூவிலிருந்து பூந்தேனை (Nectar) உறிஞ்சும்.  தேனீயின் வயிற்றுள் போகும் பூந்தேன், Hydrogen Peroxide மற்றும் Gluconic ஆக உடைக்கப்பட்டு ஒரு திரவமாக மாறும். தேனீ இந்தத் திரவத்தை மறுபடியும் வாய்க்குக் கொண்டு வந்து அதைத் தேன் கூடுல உமிழும். இப்படி உமிழப்படும் திரவம் தான் தேன்.


சரி, ஹைட்ரஜன் பெராக்சைடு பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்களே. அது ஒரு கிருமிநாசினி. மருந்துகளில பார்த்து இருப்பீங்க. அப்படி இல்லேனா, இனிமே, மருத்துவர் பரிந்துரைக்கும் (மருத்துவர் மட்டுமே பரிந்துரைக்கும்) மருந்துகளில் என்னெல்லாம் இருக்குனு சும்மா பாருங்க. அது எதுக்குன்னும் பாருங்க, சரியா? தேனில் இருப்பது - ஒரு கிருமிநாசினி என்பதால், தேனில் கிருமி வளர்வது தவிர்க்கப்படுது. இப்படி கிருமி வளராததால தேன்கெடாது. நுண்ணுயிரி வளரலேன்னா அதுக்காக தேனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காதா அப்படின்னு கேட்டால் நிச்சயம் இருக்கும். காலப்போக்கில் தேனின் நிறம் மாறலாம், Crystallize ஆகலாம். இப்படீல்லாம் ஆனாதான் அது கலப்படம் இல்லாத தேன் பிஞ்சுகளா!
தேன் கெடாதுதான். ஆனா, அதைச் சரியான முறையில சேமிச்சு வைக்கணும். சூரிய ஒளி அதிகம் படாம, ஈரப்பதம் இல்லாத இடத்துல   பயன்படுத்தினா தேன்  கெடாது.

 

# நல்லா விளையாடிட்டு உடம்பு சோர்வோட வீட்டுக்கு வந்ததும் நம்மல படுக்கையும் தலையணையும் வா வான்னு கூப்பிடும். அதுக்கிட்ட போகும் போது கொட்டாவி மேல கொட்டாவியா விட்டுக்கிட்டே தான் போவோம்ல. அப்படி  கொட்டாவி விடும் போது சிலருக்கு கண்ணுல நீர் கோத்துட்டு இருக்கும்; இல்லாட்டி கண்ணீர் வரும். அசதில கவனிச்சு இருக்கமாட்டீங்க, ஆனா, வாங்க இப்போ அதப் பற்றி தெரிஞ்சிக்கலாம். அதோட அடுத்த தடவை யாருக்காச்சும் கொட்டாவி விட்டு அழுதால், அது ‘ஏன்’னு சொல்லி, அசத்தலாம்.


நம்ம உடம்புல பல சுரப்பிகள் இருக்கு. இந்தச் சுரப்பிகள் எல்லாம் ஒரு சில வேதிப்பொருள்களைச் சீரான அளவுல சுரந்து நம்ம உடம்பைச் சீரான நிலையில வச்சிக்க உதவும். அதுல ஒரு சுரப்பி தான் கண்ணீர்சார் சுரப்பி. இது நம்மளோட இமைகளுக்கு மேல இருக்கு. இந்தச் சுரப்பி தொடர்ந்து கண்ணீரைச் சுரந்துகிட்டே இருக்கும். இப்படி சுரந்த கண்ணீர் Lacrimalduct மூலமாக கண்களுக்கு வந்து சேரும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம கொட்டாவி விடும் போது வாய பெருசா திறப்போம். அப்போ, நம்ம முகம் சுருங்கும் அல்லவா? அந்த நேரத்துல இந்தக் கண்ணீர் சார் சுரப்பி மேலே அதிக அளவு அழுத்தம் தரப்படும் அதோட அந்தச் சுரப்பி தூண்டியும் விடப்படுது. இதனால கண்ணீர் சுரக்கப்பட்டு, கண்களில கண நேரத்துல நீர் கோத்துக்குது. சரி, சொல்லுங்க கொட்டாவி பத்தி படிக்கும் போது நீங்களும் கொட்டாவி விட்டீங்க தானே...

# உங்களுக்கு பிடிச்ச முறுக்கை விரும்பிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க, யாருமே உங்களைச் சுற்றி இல்லை, அப்போ திடீர்னு அந்த முறுக்கு கீழ விழுந்துடுது. உடனே அத எடுத்து வாயில போட்டுட்டு 5 நொடி விதின்னு சொல்லுவீங்க தானே! எனக்குத் தெரியுமே, ஏன்னா, நானும் அதை ஒரு காலத்துல செய்து இருக்கேனே.. ஆனா அந்த  5 நொடியில நுண்ணுயிர் எதுவுமே உங்க முறுக்கைத் தாக்காதா?
5 நொடி விதி என்பது, (அட, கீழ விழுந்ததும், நல்ல பிள்ளைகளா தூக்கிபோட்டுடுவாங்கல்ல. இது அவங்களுக்காக) ஒரு தின்பண்டம் கீழ விழுந்ததும் 5 நொடிக்குள்ள அதை எடுத்துட்டா, அதை எந்தக் கிருமியும் தாக்கி இருக்காது என சொல்லப்படுகிறது. ஆனா, இந்த விதி முற்றிலும் தவறு. நுண்ணுயிரிகள்ல பல வகைகள் இருக்கு. ஒவ்வொரு நுண்ணுயிரியும் பரவுற நேரம் ஒவ்வொரு வகைக்கும் மாறுபடும். பல கிருமிகள், 5 நொடிகளுக்குள்ளயே பரவும். இந்தப் பரவல், பல விசயங்களை அடிப்படையாக வச்சிட்டு நடக்கும். ஈரப்பதம் அதிகமா இருந்தாலும், தரை ஓடு (Tiles) பயன்படுத்தி இருந்தாலும் பரவல் வேகமா நடக்கும். பல நேரங்கள்ல இந்த மாதிரி நுண்ணுயிரி பரவிய உணவைச் சாப்பிட்டா, உணவு நஞ்சேற்றம் (Food Poisoing) ஆக வாய்ப்பு இருக்கு. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்றவை உணவு நஞ்சேற்றத்தின் சில அறிகுறிகள். இதுல ஏதாச்சும் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள நல்லா Hydrate பண்ணிட்டு, உடனடியா மருத்துவரை அணுகுங்க. அதோட, நல்ல பிள்ளைகளா, கீழே உணவு விழுந்ததும், அதைத் தூக்கிப் போட்டுடுங்க!<


Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்