
வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்கு வாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.
உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும் தட்டுத் தடுமாறியே மிதித்து ஓட்ட பழகணும்.
தரையிலத்தான் ஓட்டணும் ஆகாயத்துல பறக்கணும் கூட்டாளிகளைச் சேர்த்துகிட்டு ஊரை வட்டமடிக்கணும்.
மூச்சு நல்லா வாங்கணும் தண்ணீ தாகம் எடுக்கணும் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திட்டு
அடுத்த சுற்று கிளம்பணும்.
மேட்டைப் பார்த்து ஓட்டணும் எழுந்து அழுத்தி மிதிக்கணும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு கொண்டாட்டத்தில் குதிக்கணும்.
உச்சிவெயிலைப் பார்க்கணும்
குளிரை என்னான்ணு கேட்கணும் வண்டி ஏறி நாங்க வந்தா
மழையும் சேர்ந்து குதிக்கணும்.! - நீதிமணி
|