Home முந்தைய இதழ்கள் 2020 மார்ச் 2020 ஓவியம் வரைவோம்!
சனி, 10 ஜூன் 2023
ஓவியம் வரைவோம்!
Print E-mail

சித்திரமும் கைப் பழக்கம்

சிறந்துயரும் நல் வழக்கம்

பத்திரமாய் மனம் அதனை

பழக்கி வெல்கநீ பதக்கம்!

 

உள்ளம் உடலினை இணைத்திடும்

உயரும் ஆற்றலைத் தந்திடும்

வெள்ளம் போன்று சிந்தனையை

வெளியில் கொண்டு வந்திடும்

 

மனதில் ஒருமைப் பாட்டினை

மலரச் செய்திடும் பழக்கம்

தினமும் வாழ்வில் உயர்ந்திடும்

திறனைத் தருவது வழக்கம்!

 

மேவிய கலைகள் போற்றிட

மேன்மை யாய்வந்த பழக்கம்

ஓவியம் வரையும் விரல்களில்

வெற்றியை நாட்டிடும் வழக்கம்!

- பல்லவிகுமார்,

விருத்தாசலம்

Share