திராவிட வாசகர் வட்டம் நடத்தும் - பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 | |||
|
* சிறுவர்களுக்கு ஆர்வமும் அறிவும் வளர்க்கும் வகையில் எந்த ஒரு பொருள் குறித்தும் கதை அமையலாம். * கதைகளில் கற்பனை / Fantasy கலந்து எழுதலாம். ஆனால், மூட நம்பிக்கை, புராணக் கதைகள், இட்டுக்கட்டிய போலி வரலாற்றுக் கதைகள், பாத்திரங்கள் சார்ந்து அமையக் கூடாது. * அறிவியல், வரலாறு, இலக்கியம், இயற்கை, நன்னெறிகள் (அன்பு, அறம், வீரம், சமூகநீதி, தன்மானம் முதலியவை) போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகை கதைகள் அமையலாம். கதைகளைக் குழந்தைகளே விரும்பிப் படிக்கும் / கேட்கும் வகையில் எழுதுங்கள். வெறும் நீதி போதனையாக அமைய வேண்டாம். * கதைகள் கிண்டிலில் வெளியிடப்பட வேண்டும். பரிசுகள்: முதற் பரிசு ரூ.- 10,000 & 2 கி. தங்க நாணயம் இரண்டாம் பரிசு ரூ.- 5,000 & 1 கி. தங்க நாணயம் மூன்றாம் பரிசு ரூ.- 2,000 & லு கி. தங்க நாணயம். அய்ந்து சிறப்புப் பரிசுகள் _ தலா ரூ.- 1,000 மேலும் விரிவான விவரங்களுக்கு: www.dravidianbooks.com/contest/
|