Home முந்தைய இதழ்கள் 2020 மார்ச் 2020 PREPOSITIONS - முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11
சனி, 10 ஜூன் 2023
PREPOSITIONS - முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11
Print E-mail

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

- கே.பாண்டுரங்கன்

நினைவில் கொள்ளுங்கள் ....

1. Preposition (முன்னிடைச்சொல்) in, at, on, about, to, from… போன்ற  எல்லாம்) இல்லாமலிருந்தால் பல சொற்றொடர்கள் தவறான பொருள் (wrong sentence) கொடுக்கும்.

இங்கே ஓர் எளிய எடுத்துக்காட்டு...

“My leg has injured an accident”.

இது சரியான சொற்றொடரா?... இல்லை.. ஏன்?

“என் கால், விபத்துக்கு காயத்தை ஏற்படுத்தி விட்டது” என்றல்லவா பொருளாகும்?

காலுக்குத்தானே காயம் ஏற்பட்டது?

இதில் Preposition வந்திருக்க வேண்டும். ஆனால், இடம் பெறவில்லை.

“ஒரு விபத்தில் என் கால் அடிபட்டு விட்டது’’ என்பதற்கு,

“My leg has injured in an accident.”

என்றுதானே எழுதவேண்டும். அதுதானே சரி.

2. Preposition (முன்னிடைச்சொல்) இருந்தாலும் சில சொற்றொடர்கள் தவறானதாகிவிடும்.

I am going to home என்பது தவறு.

“நான் இல்லத்துக்கு சென்றுகொண்டிருக்கிறேன்” என்பதை ஆங்கில முறைப்படி,

I am going home என்றுதான் சொல்ல-_-எழுத வேண்டும்.

“நான் இல்லம் சென்றுகொண்டிருக்கிறேன்’’ [I am going home] என்பதே சரியான ஒன்று.

_ இங்கு Preposition அவசியமே இல்லை.

வேண்டுமானால் ஆங்கிலத்தில் இப்படி எழுதலாம்... பேசலாம்... I am going to house... என்று.

3. Preposition (முன்னிடைச்சொல்) தவறானதாக அதாவது வேறு Preposition போட்டாலும் சொற்றொடர் தவறாகிவிடும்.-

தவறுள்ள Preposition-அய் கண்டு நீக்கி, அதற்கான சரியான Preposition-அய் கண்டுபிடிப்போமா?

எடுத்துக்காட்டாக...

Nehru was famous at his good Speech

Nehru was famous for his good speech

நேரு அவருடைய சிறப்பான பேச்சில் புகழ் பெற்றவர்

... நேரு அவருடைய சிறப்பான பேச்சுக்காகப் புகழ் பெற்றவர்

... --இரண்டு சொற்றொடர்களையும் நன்கு கவனியுங்கள்.

மேலே சொன்ன இரண்டு சொற்றொடர்களில் இரண்டாவது சொற்றொடர்தான் மிகச் சரியானது. ஏனென்றால், for என்னும் Preposition தான் இங்கே பொருத்தமானது.

சரி...

வாருங்கள் அட்டவணையைப் பார்ப்போம்.

அதற்கு முன் முக்கியமான ஒன்று:-

அட்டவணைக்குள் உள்ள ஆங்கிலச் சொற்களை  மிகத் துல்லியமாக தமிழில் மொழிபெயர்த்தால்.... சொற்றொடர் சரியாக வராது. ஆங்கிலத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு ஏற்பவே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Share