Home முந்தைய இதழ்கள் 2020 மார்ச் 2020 உலக நாடுகள் : தாய்லாந்து (THAILAND)
ஞாயிறு, 04 ஜூன் 2023
உலக நாடுகள் : தாய்லாந்து (THAILAND)
Print E-mail

அமைவிடமும் எல்லையும்:

¨           தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு.

¨           வடக்கே மியான்மரையும், லாவோசையும், கிழக்கே கம்போடியாவையும், தெற்கே தாய்லாந்து வளைகுடாவையும், மலேசியாவையும், மேற்கே அந்தமான் கடல் பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தென்மேற்கே இந்தோனேசியாவும் இந்தியாவும் உள்ளன.

¨           மொத்தப் பரப்பளவு 198 சதுர மைல்.

¨           தலைநகரம்: பேங்காக். இதுவே பெரிய நகரம்.

மக்களும் மொழியும்:

¨           மக்கள் ‘தாய்’ (Thai) என அழைக்கப்படுவர்.

¨           பெரும்பாலான மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

¨           மொழிகள் 62 (அரசு அங்கீகாரம் பெற்ற மொழிகள்)

¨           ஆட்சிமொழி ‘தாய்’ மொழியாகும்.

¨           மக்கள் தொகை 69.31 மில்லியன், உலக அளவில் 20ஆவது இடம்.

¨           பெரும்பாலான மக்கள் சீனர்கள்.

வரலாறு:

¨           இங்கு 40,000 ஆண்டுகளுக்கு முன் மனித நாகரிகம் பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

¨           ஒன்றாம் நூற்றாண்டில் “பொஊ’’ அரசும், பிறகு “புனான்’’ அரசும் இங்கு ஆட்சி செய்துள்ளன.

¨           1238ஆம் ஆண்டில் ‘தாய்’ என்கிற சயாமிய நாடு  உருவாக்கப்பட்டுள்ளது. அது ‘சுகோத்தாய்’ எனப்படும் பவுத்த நாடு எனக் கருதப்படுகிறது.

¨           கி.பி.13ஆம் நூற்றாண்டில் ‘கெமர்’ பேரரசு ஆட்சியில் இந்திய கலாச்சாரம் மற்றும் மதவாரியான தாக்கம் இங்கு பரவிவந்தது. கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் டாய், மொன், மலாய் என பல அரசுகள் உருவாகின.

¨           14ஆம் நூற்றாண்டுகளில் பவுத்த ‘தாய்’ இராச்சியங்களான சுகோத்தாய், லான்னா இராச்சியம், லான்காஸ் எனப் பல எழுச்சி அடைந்து வந்தன.

¨           14ஆம் நூற்றாண்டின் மத்தியில் ‘சாவோ பிரயா’ ஆறு பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட ‘அயுத்தயா’ இராச்சியம் ‘சுகோத்தாயின்’ பலத்தை மறைக்கத் துவங்கியது.

¨           1431ஆம் ஆண்டில் அயுத்தயா அரசு தனது பாரம்பரிய வணிகத் தொழிலை சீனா முதல் இந்தியா வரையும், ஈரான் முதல் அரபு நாடுகள் வரையும் விரிவுபடுத்தி வந்தது.

¨           16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரும், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயரும் வரத் தொடங்கினர்.

¨           1767இல் அயுத்தயா இராச்சியம் பர்மியர்களிடம் வீழ்ச்சியடைந்தது. புதிய மன்னராக தக்சின் 15 ஆண்டுகளுக்கு தலைநகரை தோன்புரிக்கு மாற்றினார்.

¨           1782இல் தாய்லாந்தில் இரத்தனகோசின் அரசு உருவாகியது.

¨           மீண்டும் முதலாம் இராமாவின் ஆட்சியில் பேங்காக் தலைநகராக மாறியது.

¨           தென்கிழக்காசியாவின் நாடுகளுக்கிடையே தாய்லாந்து ஓர் இடைத்தாங்கு (buffer) நாடாக விளங்கிவந்தது.

¨           19ஆம் நூற்றாண்டில் குறிப்பாக மேக்தொங்கின் கிழக்கில் பல பகுதிகளை பிரான்சு, மலாய், பிரிட்டிஷ் போன்ற நாடுகள் தன் பகுதிக்கு உட்படுத்தி ஆட்சி செய்ய நினைத்தன.

¨           1909 ஆங்கிலோ_சயாமிய உடன்படிக்கையின்படி பினாங்கு மலேசியாவின் வடக்கு மாநிலமாகியது.

¨           1932இல் இராணுவம், குடிமக்களின் புரட்சியின் காரணமாக மன்னர் பிரஜாதீபக் சயாம் மக்களுக்கு முதலாவது அரசியலமைப்பை அறிவித்தார்.

¨           1932 ஜூன் 24ஆம் நாள் பொதுமக்களையும் இராணுவத்தினரையும் கொண்ட குழுவின் இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் 150 ஆண்டு காலம் பதவியில் இருந்த சக்கிரி வம்சம் முடிவுக்கு வந்தது. அங்கு அரசியல் சட்ட முடியாட்சி முறை கொண்டுவரப்பட்டது.

¨           1932 முதல் 1973 வரையில் இராணுவமே ஆட்சியில் இருந்துவந்தது.

¨           1980இல் பிரேம் தின்சுலாநந்தா பிரதமராகப் பதவியில் இருந்தபோது நாடாளுமன்ற ஆட்சி முறையை படிப்படியாகக் கொண்டு வந்தார். 1991_1992 வரை மீண்டும் ராணுவ ஆட்சிமுறை வந்தது.

¨           2001 முதல் 2006 வரை பிரதமராக தக்சின் சினவாத்ரா இருந்தார். 2006இல் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைத்து இராணுவ ஆட்சி அமைந்தது.

பொருளாதாரம்:

¨           நாணயம்: பாட். இதனை ஜிபிஙி என்னும் குறியீடு மூலம் அழைக்கின்றனர்.

¨           நாட்டின் வருவாயில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்காற்றுகிறது.

¨           ஏற்றுமதிப் பொருளாக கார்கள், கணினி, மின்சாதனப் பொருள்கள், துணிமணிகள், செருப்பு, மீன் உணவு, ரப்பர் மற்றும் நகைகள் போன்றவை ஜப்பான், தென்கொரிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

¨           மக்கள் பெரிதும் புத்த சமயத்தைச் சார்ந்தே இருக்கின்றனர்.

¨           மக்கள் ‘தாய்’ ஆங்கிலம், சைனீஸ் மொழிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

¨           பிற நாட்டினர் இங்குள்ள பெண்களை சட்டப்படி திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

¨           காதல் திருமணங்கள் இங்கே அதிகமாக நடைபெறுகின்றன.

¨           40,000க்கும் மேற்பட்ட புத்தர் கோவில்கள் உள்ளன.

ஆட்சிமுறை:

பிரதமர்:
பிராயுத் சான் ஓ சா

மன்னர்:
மகா வஜீரலாங்கார்ன்

¨           ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறை _ அரசியல் சட்ட முடியாட்சி முறை

¨           பிரதமர் பிராயுத் சான் ஓ சா.

¨           மேலவை, கீழவை கொண்ட சட்டமன்ற முறை.

¨           மேலவையில் 150 உறுப்பினர்கள், கீழவையில் 350 உறுப்பினர்கள்.

¨           பிரதமரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவர். அவருடன் 35 இணை அமைச்சர்கள் செயல்படுவார்கள்.

¨           நீதிமன்றங்கள் தன்னாட்சியுடன் இயங்கும் அமைப்பு முறையைக் கொண்டுள்ளன.

போக்குவரத்து:

¨           இங்குள்ள தீவுகளுக்குச் செல்ல நிறைய படகுகள் விடப்பட்டுள்ளன.

¨           நகரத்தில் ஆட்டோ மற்றும் ரிக்சாக்கள் எளிமையாகக் கிடைக்கும். தலைநகர் பேங்காக்கின் அடையாளமாக ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன.

¨           அரசின் மெட்ரோ ரயில், பேருந்து வசதியும் உள்ளது. மற்ற நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விளையாட்டு:

¨           குத்துச்சண்டைப் போட்டிகள் மிக முக்கியத்துவமான விளையாட்டாகும்.

¨           கால்பந்து, பேட்மிட்டன் ஆகியவை மக்களால் பெரிதும் விளையாடப்படுகின்றன.

¨           முயாய் தாய், பென்காக் சிலட் போன்ற தற்காப்புக் கலைகள் தாய்லாந்தின் பாரம்பரியமான விளையாட்டுகளாக கற்றுத்தரப்படுகின்றன.

உணவு முறை:

¨           குழைந்த அரிசியில் செய்யப்படும் ஒருவகை உணவு இங்கே பொதுவான உணவு ஆகும்.

¨           லாவோ சாலட் என்னும் இறைச்சி, வெங்காயம், மிளகாய், வறுக்கப்பட்ட அரிசி, புதினா கலந்த உணவு சிறப்பு வாய்ந்த ஒன்று.

¨           பன்றி இறைச்சி முக்கிய உணவு.

¨           கடல் உணவுகள், நூடுல்ஸ் போன்றவை அனைத்து உணவகங்களிலும் கிடைக்கும்.

பருவ நிலைகள்:

¨           சராசரியாக வெப்பநிலை 310 செல்சியஸ் முதல் 320 செல்சியஸ் வரை இருக்கும்.

¨           கோடைகாலத்தில் அதிகப்பட்சமாக 400செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.

¨           டிசம்பர் மாதத்தில் 260செல்சியஸ் வெப்பநிலையும், நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிராகவும் காணப்படும்.

சுற்றுலாத் தலங்கள்:

¨           பேங்காக்கில் உள்ள ‘தி கிராண்ட் பேலஸ்’ (The Grand Palace) அரண்மனை நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

¨           ‘சண்டே வாக்கிங் ஸ்ட்ரீட்’ சியாங் மையில் உள்ள மலிவு விலையில் உணவுகள் கிடைக்கும் நடைப் பயண தெரு.

¨           ரெய்லே பீச் (Railay Beach) - கிராபி மாகாணத்தில் உள்ள கடற்கரைகளில் ஒன்று. இங்கு கடல் நீர் நீலநிறத்தில் காணப்படும். பயணிகளுக்கான ஓய்வு இருக்கைகளும் உள்ளன.

¨           கோ யாய் தேசியப் பூங்கா (Khao Yai National Park) - இந்தப் பூங்காவில் யானைகளை நாம் அருகில் சென்று பார்க்கலாம். அதற்கு உணவிடுதல், அது குளியல் செய்யும் காட்சிகளை அருகிலே வழிகாட்டிகள் அழைத்துச் சென்று காட்டுவார்கள்.

¨           காட்டுக்குள் ட்ரெக்கிங் வசதியும் உள்ளது. அங்குள்ள அழகான அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழலாம்.

Share