Home முந்தைய இதழ்கள் 2020 ஜூன் 2020 அடிக்கிற வெயிலுக்கு..2 : அய்ஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?
புதன், 28 அக்டோபர் 2020
அடிக்கிற வெயிலுக்கு..2 : அய்ஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?
Print E-mail

சரா

குழந்தைகளே, கோடை என்பது நிலநடுக்கோட்டுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்குமே மிதமானது முதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான், இன்றல்ல, நேற்றல்ல, உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே கோடைகாலம் தொடர்ந்து வருகிறது,

கோடைக் காலங்களில் நவீன வசதிகள் வரும் முன்பு மண்பானைத்தண்ணீரை கிணற்று நீரையும் பயன்படுத்தி வந்தோம். மேலும் தூய ஆற்று நீரையும் ஊற்று நீரையும் குடிக்கப் பயன்படுத்தி வந்தோம், ஆனால் நகரங்களில் மண்பானையைத்தவிர மற்றவை பயன்பாட்டில் இருந்து விலகிவிட்டன.

ஆனால் அந்த இடத்தில் நவீன சாதனமான குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) வந்து விட்டது, இப்போது நாம் அதில் தண்ணீரை வைத்து குடித்து வருகிறோம். இதன் மூலம் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

செரிமானமின்மை:

உடல் வெப்பநிலை சீராக வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில், அயிஸ் தண்ணீர் குடித்து அதன் வெப்பநிலையைக் குறைத்தால் மீண்டும் சமநிலைப்படுத்த தன் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிப்படுத்தும். இதனால் மற்ற செயல்கள் குறிப்பாக செரிமான வேலைகள் தடைபடும்.

மலச்சிக்கல்:

செரிமானம் சீராக இல்லை என்றாலே மலச்சிக்கல் தானாக உண்டாகும்.

தொண்டை கரகரப்பு:

குளிர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். மூக்கடைப்பு ஏற்படும்.

உடல் பருமன்:

உணவு உண்ட பின் குளிர்ச்சியான நீரைக்குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகளை உடல் பிரிப்பதற்கு முன்பாகவே அவை குளிர்ச்சியால் திடமாக மாறிவிடும். பின் செரிமானமின்றி உடலிலேயே தங்கி கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும்.

இதய பாதிப்பு:

ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவெனில் மிகவும் குளிர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பைக் குறைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அதிர்ச்சி:

உடற்பயிற்சி அல்லது கடுமையான வேலைக்குப் பின் குளிர்ச்சியான நீரைப் பருகினால் உடல் சூட்டில் இருக்கும் போது உடனடியாக குளிர்ந்த நீரை உட்செலுத்துவது உடலின் திடீரென மின்சாரம் (ஷிலீஷீநீளீ ஜிஷீ சீஷீuக்ஷீ ஙிஷீபீஹ்) பாய்ந்தது போன்ற உணர்வை உண்டாக்கும்.

நீரிழப்பு:

குளிர் நீர் குடித்துக் கொஞ்ச நேரத்தில் மீண்டும் உங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படும். இதற்குக் காரணம் உடல் சூட்டைத் தணிக்க நீரை அதிகமாக உறிஞ்சி நீர்ப் பற்றாக்குறையை உண்டாக்கும். இதற்கு மீண்டும் குளிர் நீர் குடிக்காமல் அறையின் வெப்ப நிலையில் உள்ள நீரைக் குடியுங்கள்.

நாம் மண்பானைகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல பழக்கமாகும்.

தற்போது அதிக அளவு கேன் தண்ணீரைப் பயன்படுத்தும் சூழலுக்கு நகர மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். கேனில் வரும் தண்ணீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்படுவதால் அதில் உள்ள நமக்கு தேவையான மினரல் எனப்படும் ஊட்டம் தரும் நுண் தனிமங்கள் அனைத்தும் வடிகட்டப்-பட்டுவிடுகின்றன, மேலும் கிருமி நாசினிகளும் அரசு அனுமதித்த அளவு சேர்க்கப்படுகிறது, ஆகவே இந்த நீர் ஒருபுறம் மென் நச்சாகவும் மறுபுறம் எந்த ஒரு தனிமக் கரைசலும் இல்லாமல் இருப்பதால் இந்த நீர் உடலுக்கு கிட்டத்தட்ட பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. முக்கியமாக சிறுநீரகங்களில் உள்ள ஜவ்வூடு பரவல் முறை மினரல் இல்லாததால் நீர் முழுவதையுமே வெளியேற்றிவிடும். இதனால் ரத்தத்தின் இலகுதன்மையும் பாதிக்கப்படுகிறது.

ஆனால் கேன் தண்ணீரை மண்பானையில் ஊற்றிப் பயன்படுத்தும் போது அதில் ஆக்ஸிஜன் மற்றும் மண்பானையில் உள்ள ஊட்டம் தரும் தனிமங்கள் மீண்டும் தண்ணீரில் கரையும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில மூலிகைகள் எடுத்துக்காட்டாக நெல்லிக்காய் மரத்துண்டுகள், வெட்டிவேர், கடுக்காய் போன்றவற்றை மண்பானைத்தண்ணீரில் போட்டு குடித்தால் உடலுக்குத் தேவையான அனைத்து ஆற்றலும் கிடைப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் நமக்குக் கிடைக்கிறது.

ஆகவே நவீனத்தோடு நாம் வாழ்ந்தாலும் உடல் தீமையிலிருந்து விலகி நன்மையைத் தரும் இயற்கைப் பொருளை இணைத்து நாம் வாழ்ந்தால் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழலாம்.<

Share