Home முந்தைய இதழ்கள் 2020 ஜூலை 2020 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15
சனி, 28 மே 2022
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15
Print E-mail

கே.பாண்டுரங்கன்

Correlative Conjunctions என்றால் என்ன?

பெயரிலேயே தெரிகிறதே... Co(r)‘relative’ Conjuntions

CO என்றால் “உடன்’’ Relative என்றால் “உறவு’’. அதாவது “உடனுள்ள உறவு’’. எப்போதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ள _ தொடர்புள்ள _ உறவுள்ள இணைப்புச்சொற்கள்.

சுருக்கமாகச் சொன்னால் இரு உறவுள்ள இணைப்புச்சொற்கள்.

ஏன் இணைப்புச்சொற்கள்...  அல்லது சிஷீஸீழீuஸீநீtவீஷீஸீs என்று பன்மையிலேயே (Plural- -இல்) சொல்கிறோம்?...........?

ஏனென்றால்.... Correlative Conjunctions

எப்போதுமே இரட்டையாகத்தான் (Couple- -ஆகத்தான்) வரும்.

விண்ணையும் மண்ணையும் “மழை-- - வெயில்’’ என்னும் உறவு  (தொடர்பு) இணைக்கிறது;.

இரு தனித்தனி மனிதர்களை “அன்பு-பண்பு’’ என்னும் உறவு (தொடர்பு) இணைக்கிறது; இணையர் (Couple) ஆக்குகிறது. அதுபோல,

இரண்டு தனித்தனி சொற்றொடர்களை Correlative Conjunctions என்ற தொடர்பு இணைப்புச் சொற்கள் இணைக்கின்றன.

கடல்கள் - ஒழுங்குற இருப்பது, நதிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ஒழுங்கோடு செல்வது எல்லாமும் இரட்டைக் கரைகள் அமைவதால்தானே!

அதுபோல்தான் இரண்டு தொடர்பு இணைப்புச் சொற்கள் இணைந்தால்தான் புதிய சொற்றொடரும் ஒழுங்குற அமையும். ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள உறவை அல்லது தொடர்பை சரியாகச் சொல்லும்.

இரண்டு தனித்தனி சொற்றொடர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக,

Singaravelu likes to become a singer.

Singaravelu likes to become a Music Director.

“சிங்காரவேலு ஒரு பாடகர் ஆக விரும்புகிறார்.’’

“சிங்காரவேலு ஓர் இசை அமைப்பாளர் ஆக விரும்புகிறார்.’’

_ -இரண்டும் தனித்தனிச் சொற்றொடர்கள்

_ இரண்டும் தனித்தனிப் பொருள் கொண்டவை.

இவற்றைத் தொடர்புபடுத்த அல்லது இந்த சொற்றொடர்களில் உள்ள உறவைச் சரியாகச் சொல்ல தொடர்பு இணைப்புச் சொற்கள் (Correlative Conjunctions) சேர்த்தோமேயானல்...?

இங்கே, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் இரட்டை இணைப்புச்சொற்கள்.

EITHER.....OR என்ற தொடர்பு இணைப்புச் சொற்களை (Correlative Conjunctions) எடுத்துக்கொள்வோம்.

ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதுவது?

Singara velu likes to become Either a singer or a Music Director.

என்று சொல்லுவோம் - எழுதுவோம்

தமிழில்:

சிங்காரவேலு ஒரு பாடகர் ஆகவோ அல்லது ஓர் இசை அமைப்பாளர் ஆகவோ விரும்புகிறார்.

என்று சொல்லுவோம் - எழுதுவோம்.

இவ்வாறு ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள உறவை (தொடர்பை) வெளிப்படுத்துவதால் தான் இது தொடர்பு இணைப்புச்சொற்கள் எனப்படுகின்றன.

- - உங்கள் நினைவுக்காக! கீழே படத்தைப் பாருங்கள்

இரண்டு பகுதிகளாய் உள்ள தொடர்பு இணைப்புச்சொற்கள்...

இரு தனித்தனி சொற்றொடர்களை இணைத்து புதிய ஒரு கலப்புத் தொடர்(பு) சொற்றொடரை உருவாக்குகிறது.

தொடர்பு இணைப்புச்சொற்கள் மிகவும் குறைவே. அதனால் அவற்றை எளிதில் கவனத்தில் வைத்துக் கொள்ளலாம்.

கீழே இருப்பவைதான் தொடர்பு இணைப்புச்சொற்கள் (Correlative Conjunctions).அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

 

[சுருக்க முறையில் அவற்றின் முதல் எழுத்துகளைச்சேர்த்து]

“BEN-N-NSW’’--- (பென்ன்னஸ்டபுள்யூ) என்றவாறு  எழுதி மனனம் செய்து Correlative Conjunctions எவை என்று எளிதில் நினைவில்வைத்துக்கொள்ளலாம்...].

எடுத்துக்காட்டுகள்:

The Director handles (perfectly) both Money and Time.

அந்த இயக்குநர் பணம்  மற்றும் நேரம் இரண்டையும் சரியாகக் கையாளுகிறார்.

பூபாளன் 4 மணிக்கோ அல்லது 5 மணிக்கோ எழுகிறான்.

He likes neither mango nor goa.

அவர் மாம்பழத்தையும் விரும்புவதில்லை; கொய்யாவையும் விரும்புவதில்லை;

Sathya Raj is not only the tallest man but also a good genine person.

சத்யராஜ் உயரமான மனிதர் மட்டுமல்ல; பண்பால் உயர்ந்த நல்ல மனிதரும் கூட

[No sooner ......than வைத்து எழுதும்போது, ஆங்கில வரைமுறைப்படி....]

He had no sooner analysed his mistake than he corrected it --என்றும் எழுதலாம்

No sooner had he analysed his mistake than he corrected it. -என்றும் எழுதலாம்

No sooner did he analyse his mistake than he corrected it. --என்றும் எழுதலாம்

மதன் தன் தவறை உணர்ந்த கணத்தி லேயே அப்பொழுதே தன் தவறை திருத்திக்கொண்டார்.

Ragi is such a good food that improves our health.

ராகி (கேழ்வரகு) என்பது நம் உடல் நலத்தை முன்னேற்றக்கூடிய, அப்படி ஒரு நல்ல உணவு.

People are in chaos whether ‘Lock-Down’ will end or not

மக்கள் “லாக் டவுன்’’ முடிந்திடுமா, முடியாதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

[மீண்டும் சந்திப்போம்]

 

“BEN-N-NSW’’

BOTH........AND - இரண்டையும் ....இதையும் அதையும்

EITHER........OR - இது.... அல்லது அது [இவர் ....அல்லது அவர்]

NEITHER........NOR - இதுவுமல்ல...அதுவுமல்ல [இவருமல்லர் ...அவருமல்லர்]

NOT ONLY......BUT ALSO  - இதுமட்டுமல்ல........அதுவும்தான்

NO SOONER......THAN - அந்த கணத்திலேயே.......உடனேயே

SUCH.......THAT - அப்படி........ செய்யக் கூடியவாறு.

WHETHER.......OR -  இதுவா?.......அதுவா? [கேள்வி வரும்]

குறிப்பு: மேற்கொண்டவை தவிர, இன்னும் சில உள்ளன. அவற்றைப் பிறகு எங்காவது  பயன்படுத்தும் போது தெரிந்து கொள்வோம்.

Share