குறுக்கெழுத்துப் போட்டி | |||
|
இடமிருந்து வலம்: 1. பச்சைத் தமிழர் கர்மவீரர் கல்வி வள்ளல் ______ பிறந்தநாள் ஜூலை 15. (5) 3. மழை ______ வேறு சொல். (2) 5. நாம் வசிக்கும் கண்டம் ______. (3) 6. கைக் ______ நேரம் பார்க்க உதவும். (5) 10. ஆறுவது ______ (திரும்பியுள்ளது) (3) 11. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருக்கு எதிராக “ ______ ரு சங்கார’’ யாகம் நடத்தினர் போராட்ட எதிரிகள். (திரும்பியுள்ளது) (2) 12.”மரம் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை’’ என்றார் சீனப் புரட்சியாளர் ______(2) 13. ஆசிரியர் தாத்தாவிற்கு பிடித்த எழுத்தாளர் வி.ஸ.காண்டேகர் எழுதிய நாவல் ஒன்று ______.(3) 14. விதண்டா ______ செய்யாதீர். (3) 16.கிரிக்கெட்டில் வீரர்கள் விக்கெட்டுகளுக்கிடையே ஓடி எடுப்பது ______. (2) 18. கற் ______ கள் இங்கே கடவுள்களாக வழங்கப்படுகின்றன. (2) 19. மேற்குவங்க மாநில முதல்வர் ______. (3) மேலிருந்து கீழ் 1. பெரியார் இளம் வயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வடநாட்டில் உள்ள ______க்கு சென்றார்.(2) 2. திருவிழாக்களில் குழந்தைகள் ______ இதில் ஏறி சுற்றுவார்கள். (5) 3. தமிழ் மாதங்களில் ஒன்று ______. (2) 4. சவுதி அரேபியா பணத்தின் பெயர் ______. (3) 5. இல்லை எதிர்ச்சொல் ______. (2) 7. “சிதம்பர ______”. (7) 8. சுயமரியாதை - வேறு சொல். (5) 9. ______ கொண்டவனுக்கு புத்தி மட்டு. (5) 14. “ ______ ப்போம் பெரியாரை,” “சுவாசிப்போம் சுயமரியாதையை” (2) 15. 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது விடு ______. (2) 17. ______ என்ற ஆணவம் கூடாது (கீழிலிருந்து மேலாக) (2) - பெரியார்குமார், இராசபாளையம்
|