Home முந்தைய இதழ்கள் 2020 ஜூலை 2020 எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா
புதன், 28 அக்டோபர் 2020
எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா
Print E-mail

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

எதையும் கண்டு அஞ்ச மாட்டாள்

 

பேய் பூதம் இல்லை என்பாள்

ஒத்தைக் கண்ணன் நம்ப மறுப்பாள்

 

இடியின் சத்தம் இனிமை என்பாள்

இருட்டில் கூட தனியே நடப்பாள்

 

குரைக்கும் நாயை முறைத்துப் பார்ப்பாள்

கரப்பான் பூச்சியைக் கையில் பிடிப்பாள்

 

ஊசி என்றால் ஓட மாட்டாள்

கசாயம் தந்தால் குடித்துக் கொள்வாள்

 

தவறுகள் செய்தால் திருத்திக் கொள்வாள்

எங்கும் எதையும் மறைக்க மாட்டாள்

 

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

எதையும் கண்டு  அஞ்ச மாட்டாள்.

- ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

Share