Home முந்தைய இதழ்கள் 2020 செப்டம்பர் 2020 விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!
சனி, 28 நவம்பர் 2020
விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!
Print E-mail

தங்கையரே! தம்பியரே! வாருங்கள்! - தலைவர்

தந்தை பெரியார் வாழ்வைக் கேளுங்கள்!

எங்கெங்கும் அவர்கொள்கை பரப்புங்கள்! - தமிழர்

இனமானம் குன்றாது நிரப்புங்கள்!

 

பகுத்தறிவுச் சிந்தனைகள் விதைத்தார் - தமிழரைப்

பற்றியுள்ள நோய்களெல்லாம் புதைத்தார்!

வெகுவாகப் போராட்டம் கண்டார்! - கொடிய

வெஞ்சிறைக்கும் அஞ்சிடாமல் வென்றார்!

 

வைக்கத்தில் படைநடத்திச் சென்றார்! - ஆரியர்

வாயடைத்து மெய்புதைத்து நின்றார்!

வைக்கத்தின் வீதிகளில் அன்று! - நடக்க

வாங்கித்தந்தார் உரிமைகளை வென்று!

 

சாதிமத பேதங்களை அழித்தார் - மூட

சனாதனக் கொள்கைகளை ஒழித்தார்!

வீதியெங்கும் பரப்புரைகள் செய்தார் - அறிவு

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

- டாக்டர் மதி

Share