நல்லுணவு | |||
|
கேழ்வரகு கம்பு சோளம் கேடற்ற வரகு சாமை கூழ்குடித்தல் எல்லாம் பண்டைக் குலத்தமிழர் சீர்ஆ காரம்;
காலையிலே நீரா காரம் கடும்கோடைக் கேற்றவா காரம்; மாலையிலும் எளிதா யுண்டார் மறத்தமிழர் அந்த நாளில்;
இட்டலியும் தோசை புட்டும் இனிப்பான ஆப்பத் தோடு தொட்டுண்ணச் சட்னி சாம்பார் துணைவந்த நல்ஆ காரம்;
பொங்கலுடன் உப்பு மாவும் பூரியுடன் நல்சப் பாத்தி எங்கிருந்தோ வந்தி ணைந்த இணையான உணவு கள்தாம்;
வெளிநாட்டுப் பீட்சா பர்கர் வேண்டாமே; கேடே யாகும்; துளிகூடச் சத்தே யற்றத் தோதில்லாத் தீயா காரம்;
நம்நாட்டின் உணவு கள்தாம் நம்முடலுக் கேற்ற வையாம்; செம்மைநல வாழ்வுக் கென்றும் செந்தமிழர் உணவே நன்றாம். - கே.பி.பத்மநாபன், கோவை.
|