சிட்டாய் பறந்துவா! | |||
|
சின்னச் சின்னச் சிட்டே வா, சிறக டித்துக் கிட்டே வா! அன்ன நடை போட்டே வா, அச்சந் தன்னை விட்டே வா!
சின்ன அலகால் கொத்தி வா, சிறிய காலால் தத்தி வா... சன்னக் குரலில் கத்தி வா... சர் சர்... என்று சுத்தி வா!
தின்ன என்ன வேண்டும் வா.. தினையும் கம்பும் வேண்டுமா? தின்று மகிழத் தாரேன் வா தினமும் இங்கே வா... வா... வா...! - ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி. கோவில்பட்டி
|