Home முந்தைய இதழ்கள் 2021 மார்ச் 2021 கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு
வியாழன், 02 பிப்ரவரி 2023
கதை கேளு.. கதை கேளு..: பொறந்த நாளு
Print E-mail

விழியன்


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து விடியற்காலை நான்கு முப்பதுக்கு வந்தடைந்தது. செந்தில்நாதனும் அவன் மகன் புகழேந்தியும் இறங்கினார்கள். புகழேந்தி இப்போதுதான் முதல்முறையாக சென்னைக்கு வருகின்றான். பேருந்து நிலையத்தில் ‘பேருக்கு’ என எல்லாரும் முகக்கசவம் அணிந்து இருந்தார்கள். புகழேந்தி மிகவும் கவனமாகவே தன் முகக்கவசத்தை அணிந்திருந்தான். தன் அப்பாவிடமும் “போடுங்க போடுங்க’’ என போடச்சொல்லிக்கொண்டே இருந்தான்.

“புகழ், இங்கயே குளிச்சிடுவோம்” என்றார். ஒருவர் மாற்றி ஒருவராக பேருந்து நிலையத்தில் இருந்த ஏற்பாட்டில் குளித்து முடித்தனர். பையில் வைத்து இருந்த வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் எடுத்து செந்தில்நாதன் அணிந்துகொண்டார். அவர்களின் சென்னை வருகைக்குக் காரணம் விநோதமானது. செந்தில்நாதனுக்கு மிகவும் பிடித்தமான சினிமா நடிகரின் பிறந்தநாள் அன்றைய தினம் என்பதால், அவரை அவரது இல்லத்தில் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் செந்தில்நாதன் வந்துள்ளார். ஆனால், புகழுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. சென்னையைப் பார்க்கலாம் என்கிற ஒரே காரணத்திற்காக தன் அப்பாவுடன் வந்தான்.

காலை உணவைத் தன் கடையில் சாப்பிடுமாறு அசோகன் சொல்லி இருந்தார். அசோகனுக்கும் செந்தில்நாதனின் ஊர்தான். அங்கிருந்து வந்து சென்னையில் சின்னதாக ஒரு சிற்றுண்டிக் கடை வைத்துள்ளார். சென்னைக்கு வருவதாக முந்தைய தினம் சொன்னதும், “அவசியம் கடைக்கு வாங்க’’ என்றார். கிட்டத்தட்ட அசோகனும் செந்தில்நாதனும் ஒரே வயதினர்தான். இருவருக்குமே தாமதமாகத் திருமணமானது மட்டுமே ஒற்றுமை. செந்தில்நாதனும், “வருகின்றேன்’’ என்று சொல்லிவிட்டார். ஏனெனில், சினிமா நடிகரின் வீடும் அசோகன் கடை அருகிலேயேதான் இருந்தது. ஒரு மாநகரப் பேருந்தும், ஒரு ஷேர் ஆட்டோவும், கொஞ்சம் நடையுமாக அசோகனின் கடையை அடைந்தனர்.

கடையில் மொத்தமே ஆறு பேர் தான் ஒரே நேரத்தில் அமர முடியும். வெளியே எப்போதும் பால் காய்ந்துகொண்டே இருந்தது. பேருக்கு என ஒரு பாய்லர் இருந்தது. அது தேநீர்க் கடையின் அடையாளம். செந்திலையும் புகழையும் பார்த்ததுமே ஓடிவந்து கட்டிப்பிடித்தார். “பேரு என்ன கண்ணா” என புகழேந்தியிடம் கேட்டார். “என்னடா இது டிரஸ்ஸு” என செந்திலை கிண்டல் அடிக்கவும் செய்தார். புகழுக்குப் பிடித்தமான பூரிக்கிழங்கு  சாப்பிட்டான். வழக்கமாக மூன்றுதான் வீட்டில் கிடைக்கும். ஆனால், அசோகனின் மனைவி ஆறு வைத்துவிட்டார். அசோகனுக்கும் ஒரு மகன், அவனுக்கும் புகழின் வயதுதான். செந்தில்நாதனிடம் ஏதோ அவசரம்போலத் தெரிந்துகொண்டே இருந்தது. “தலைவர் வீட்டுக்கு சீக்கிரம் போகணும், கிளம்பு புகழ்” என அவசரப்படுத்தினார். புகழ் அங்கேயே இருப்பதாகச் சொல்லிவிட்டான். அதுவும் சரி என செந்தில்நாதன் கிளம்பிவிட்டார். கிளம்பும்போது இடுப்பில் ஒரு துண்டினையும் கட்டிக்கொண்டு நெற்றியில் விபூதியை அடித்துக்கொண்டு கிளம்பினார். புகழுக்கு மிகவும் வெட்கமாகவும் இருந்தது.

செந்தில்நாதன் நடிகரின் வீட்டுத் தெருவினை அடையும்போது அங்கே கூட்டத்தைப் பார்த்துவிட்டார். வாயில் விரலைவிட்டு விசிலடித்துக் கொண்டே உற்சாகமாக நடனமாடினார். அங்கே பேண்டு வாத்தியம் வேறு ஏற்பாடாகி இருந்தது. நடிகர் நடித்த படத்தில் இருந்து பல “கெட்டப்பு’’களில் பலர் வந்திருந்தனர். “அடச் சே, நாம ஏன் இந்த ஆடையை யோசிக்கவில்லை’’ என நினைத்துக் கொண்டார். டி.வி., யூடியூப் என பல இடங்களில்  கேமராக்கள் இருந்தன. அனைத்தின் முன்பும் ஒரே ஆட்டம்தான். “தலைவா.. தலைவா” என எங்கும் கூக்குரல். “ஹாப்பி பர்த்டே தலைவா” என கோஷம். ஒரு பக்கம் “வா தலைவா வா..” என்றும் கேட்டது. பட்டாசு வேறு வெடித்துக்கொண்டே இருந்தது. போலிஸ் வந்து அசம்பாவிதம் நிகழாமல் பார்த்துக் கொண்டனர். மதுரை பக்கம் இருந்து ஒரு ரசிகர் மன்றத்தில் இருந்து வேனில் வந்திருந்தனர். எல்லாருக்கும் மதியம் சாப்பிட சாப்பாடு பொட்டலங்கள் கொடுத்தனர். ஒரு மன்றத்தினர் தண்ணீர் புட்டிகள் விநியோகித்தனர். மதியத்திற்கு மேல்தான் நடிகர் வீட்டிலேயே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது. போன வாரமே வராதீங்கன்னு சொல்லிட்டாராம். “அவரு அப்படித்தான் சொல்லுவாரு. அதுக்காக வராமலா இருக்க முடியும்” என்றனர் ரசிகர் பட்டாளம்.<

Share