வெடி வேண்டாம் | |||
|
கரிமருந்தால் ஆனவெடி கண்ணைக் குருடாக்குதே! கவனமின்றி வெடித்துவிட்டால் கைகால்கள் போகுதே!
சுற்றுச்சூழல் மாசுபட்டுச் சுடுகாடாய் ஆகுதே! புகையுமிங்கே வந்துநமது மூக்குவழி நுழையுதே!
காற்றுமாசு படுவதினால் கண்ணெரிச்சல் வருகுதே! சிதறிவெடிக்கும் பட்டாசாலே சிவந்தகாயம் வருகுதே!
கருவிழியதிலே பாதிப்பானால் கண்ணொளி யின்றித் தவிப்பீரே! மண்ணிலுள்ள மக்களெல்லாம் எண்ணி இதனைத் தவிர்ப்பீரே!
சிறுவர்நீங்கள் முடிவெடுத்தால் சிறுத்தைபோலப் பாய்ந்திடலாம்! மின்னல்வேக வெடியொழித்தே மீதி வாழ்வில் மகிழ்ந்திடலாம்!
பெற்றோரெல்லாம் சிந்தித்துப் பொறுப்பாய்விழாவை விட்டிடலாம்! பொருளேயில்லாக் கதைவிழாவை பொசுக்கித்தள்ளி ஒழித்திடலாம்!
விழாக்கள்தோறும் வெடிவெடித்தால் வீணாய்ப்பணந்தான் கரியாகும் வேட்டில்லாத விழாக்களையே வேர்ப்பலாபோலத் தேர்ந்தெடுப்போம்! - தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன், தெற்குச் சோழபுரம்
|