கணக்கு ; எண்ணோடு விளையாடு | |||
|
திருச்சி தமிழப்பன் அன்பு பிஞ்சுகளே, இப்போது ஈரிலக்க (two digit) எண்களோடு ஒரு விளையாட்டு:- உங்கள் நண்பரிடம் ஓர் ஈரிலக்க எண்ணை ஒரு தாளில் எழுதச் சொல்லுங்கள் (குறிப்பு: இரண்டு இலக்கங்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. எ.கா.: 88, 22 இவைபோன்று) அந்த எண்ணை திருப்பி எழுதச் சொல்லுங்கள். எ.கா.: 78 என்றால் 87, 43 என்றால் 34. பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிக்கச் சொல்லுங்கள். கழித்து வந்த விடையில் ஓர் இலக்கத்தை சொல்லச் சொல்லுங்கள். நீங்கள் மற்ற இலக்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியும். எ.கா.: கழித்து வந்த விடையில் முதல் இலக்கம் 3 என்றால் இரண்டாம் இலக்கம் _ 6. முதல் இலக்கம் 5 என்றால் இரண்டாம் இலக்கம் -_ 4 முதல் இலக்கம் 1 என்றால் இரண்டாம் இலக்கம் -_ 8 முதல் இலக்கம் 2 என்றால் இரண்டாம் இலக்கம் -_ 7 எப்படி கண்டுபிடிப்பது? ஈரிலக்க எண்ணை திருப்பி எழுதி, பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிப்பதால் வரும் ஈரிலக்க எண்ணின் இரண்டு எண்களையும் கூட்டினால் ஒன்பது மட்டுமே வரும். எ.கா.: 87 _ 78 = 09 84 -_ 48 = 36 63 -_ 36 = 27. எனவே, உங்கள் நண்பர் கழித்து வந்த விடையில் முதல் இலக்கத்தை கூறினால், 9லிருந்து முதல் இலக்கத்தை கழிப்பதால் இரண்டாம் இலக்கம் கிடைத்துவிடும். நண்பர்களோடு விளையாடுங்கள். அடுத்த இதழில் மூன்று இலக்க எண்கள் (three digit number). . <
|