தோட்ட உலகம்! | |||
|
எங்கள் வீட்டுத் தோட்டம் எழில் கொழிக்கும் தோட்டம்... அங்கும் இங்கும் செடிகள் அடர்ந்து படர்ந்த கொடிகள்!
தொங்கும் புடலைத் தோட்டம் தோப்புப் போன்ற தோட்டம்... சங்கு வண்ணக் கத்திரி... சரஞ்சரமாய் பாகற்காய்!
சுற்றுப்புறம் சுரைக்காய்... கொத்துக் கொத்தாய் அவரைக்காய்... வெற்றுத் தரையாய் - இல்லாது வகைபல கீரைகள் கண்டிடலாம்!
எங்கள் வீட்டுத் தோட்டம்... எல்லாம் விளையும் தோட்டம்... நீங்கள் வந்து பாருங்கள்... நெஞ்சம் நிறைந்து நெகிழ்வீரே! - ச.ஆ.கேசவன்,
இனாம்மணியாச்சி, கோவில்பட்டி
|