கணக்கு : எண்ணோடு விளையாடு! | ||
|
எண்களோடு விளையாடுவது என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கும் தெரியுமா? 1. பிரச்சினைகளைப் பகுத்தறிய 2. கண்டுபிடிக்கும் மனப்பான்மை வளர 3. சிந்தனையைத் தூண்ட 4. மனதை ஒருமுகப்படுத்த 5. காரண காரிய தொடர்புகளைக் கண்டறிய 6. சிந்தனையின் பயனைச் சரிபார்க்க 7. ஒரு முடிவுக்கு வர 8. பிழையின்றி விடைகாண 9. எழுத்து வேலையில் ஒழுங்கும் அழகும் ஏற்படுத்த இவைபோன்று பல்வேறு பயன்கள் உள்ளன. இப்போது எண்களோடு விளையாடுவோம். I. மூன்று எண்களின் கூட்டற்பலனும், பெருக்கற்பலனும் ஒன்றே. அந்த மூன்று எண்கள் எவை? II. விடைகளைக் காண்பது மட்டும் சரியல்ல. படிக்கும் வழிமுறைகளும் முக்கியம். விடைகள் சரி. ஆனால், கண்டுபிடித்த முறை தவறு? ஏன்-? III. கீழ்க்கண்ட பெருக்கல் பலனை ஒரு நொடியில் எழுதலாம். எப்படி? (i) 111 ஜ் 111 = 12321 (ii) 1111 ஜ் 1111 = 1234321 (iii) 111111 ஜ் 111111= 12345654321 (iv) (i) ஏதாவது ஓர் எண்ணை எடுத்துக்கொள்க (எத்தனை இலக்கமாகவும் இருக்கலாம்) (ii) அதோடு அதற்கு அடுத்த எண்ணைக் கூட்டுக (iii) 9அய்க் கூட்டுக (iv) விடையை இரண்டால் வகுக்க (v) எடுத்துக் கொண்ட எண்ணைக் கழித்து விடுக. விடை என்ன? (V) (i) ஏதாவது ஓர் எண்ணை எடுத்துக் கொள்க (எத்தனை இலக்கமாகவும் இருக்கலாம்) (ii) அந்த எண்ணோடு 3அய்க் கூட்டுக (iii) கூட்டுத் தொகையை 3ஆல் பெருக்குக (iv) பெருக்குத் தொகையில் 9அய்க் கழிக்க (v) கழித்து வந்த எண்ணை 3ஆல் வகுக்க (vi) வகுத்து வந்த எண்ணிலிருந்து நீ எடுத்துக் கொண்ட எண்ணைக் கழிக்க. விடை என்ன?
விடைகள்: எண்ணோடு விளையாடு! (I) மூன்று எண்கள்: 1, 2, 3 (1+2+3=6; 1x2x3=6) (II) 16 என்பது ஒரே எண். இரண்டு எண்களின் பெருக்கல் அல்ல. அதாவது 1 x 6 அல்ல. 64 என்பதும் ஒரே எண். இரண்டு எண்களின் பெருக்கல் அல்ல. அதாவது 6x4 அல்ல. எனவே, மேலே உள்ள ஆறையும், கீழே உள்ள ஆறையும் அடித்து விடை கண்டுபிடிப்பது சரியல்ல. (III) (i) பெருக்கலில் உள்ள எண்கள் மூன்று இலக்க எண்கள் (Three digit number). எனவே, நடுவில் 3உம் இரண்டு பக்கமும் இரண்டு வரிசையில் (ஞிமீநீமீஸீtவீஸீரீ ஷீக்ஷீபீமீக்ஷீ) எழுதவும். 111 x 111= ..3.. (IV) விடை : 5 (V) விடை : 0
|