விழிப்புணர்வு ஒளியேற்றுவோம்! (உரையாடல் கவிதை) | |||
|
ராசா: தீபா வளிக்குப் பட்டாசு தயவு செய்து வேணாம்டா; ராமு: ஆகா, உனக்கு என்னாச்சு? அதிச யம்தான் உன்பேச்சு! ராசா: பட்டாசு வெடிக்கும் புகையாலே பரவும் மாசு சூழலிலே; ராமு: போன ஆண்டில் வெடித்தாயே புதிதாய் இப்போ சொல்லுறயே; ராசா: சிகரெட், பீடி புகைப்போரை சீக்கிரம் பற்றும் கொரோனாதான் ராமு: ஆமாம் ராசா, உண்மைதான் அதற்கும் இதற்கும் தொடர்பென்ன? ராசா: பட்டாசுப் புகையும் சேர்ந்திட்டால் பரவிடும் தொற்றும் கூடிடுமே; ராமு: அதனால் என்ன செய்வதடா? அதையும் நீயே சொல்லிடுடா! ராசா: பட்டாசு வாங்கும் பணத்தினிலே சோப்பு சானி டைசருடன் முகக்கவ சங்கள் வாங்கிடுவோம்; ஏழை களுக்கே வழங்கிடுவோம்! ராமு: அருமை யான யோசனைதான்; அனைத்துப் பள்ளி நண்பரெல்லாம் ஒன்றாய்க் கூடி விழிப்புணர்வின் ஒளியை ஏற்றி உயிர்காப்போம்!
- கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர்,
கோவை-641005
|