கணக்கு : எண்ணோடு விளையாடு! | |||
|
திருச்சி தமிழன்பன் அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே! கடந்த மாத வினாக்களுக்கான விடைகள்: 1. 10 புறாக்கள் 10 நாள்களில் ஒரு மூட்டை அரிசியைச் சாப்பிடும். 2. ஈக்களுக்கு 6 கால்கள், சிலந்திக்கு 8 கால்கள், ஈக்களின் எண்ணிக்கை - 5, சிலந்திகளின் எண்ணிக்கை - 4. 3. இனி இந்த மாத கணக்குகள்: 1. ஒரு கடிகார முகம் உள்ளது. இரண்டு கோடுகள் வரைந்து மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். மூன்று பகுதிகளிலும் உள்ள எண்களின் கூடுதல் சமமாக இருக்க வேண்டும். 2. 8 லிட்டர், 5 லிட்டர், 3 லிட்டர் கொள் அளவுள்ள மூன்று பாத்திரங்கள் உள்ளன. 8 லிட்டர் பாத்திரத்தில் மட்டும் 8 லிட்டர் பால் உள்ளது. மற்ற பாத்திரங்களில் இல்லை. 8 லிட்டர் பாலை 4 லிட்டர் என சம பாகமாகப் பிரிக்கவும். 3. மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு தொடர்வண்டி(ரயில்) ஒரு சுரங்கத்திற்குள் முழுமையாக நுழைய 3 நொடிகள் ஆகின்றன. சுரங்கத்தை விட்டு வெளியே வர ஒரு நிமிடம் ஆகின்றன. ரயிலின் நீளம் என்ன? சுரங்கத்தின் நீளம் என்ன?
|