Home முந்தைய இதழ்கள் 2022 ஜனவரி 2022 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 29
செவ்வாய், 06 டிசம்பர் 2022
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 29
Print E-mail

கே.பாண்டுரங்கன்

‘ஆடை நெய்தல்’ என்ற நீண்ட நேரக் கடின வேலை நெசவாளிகளால் எப்படி முடிகிறது? வெவ்வேறு வேலைப்பாடுகள், வண்ணங்கள், சரிகைகளின் மின்னல்கள், வடிவமைப்பு எண்ணங்கள்  -  இவற்றை எப்படியெல்லாம் அவர்களால் உருவாக்க முடிகிறது?

எந்த வேலையை ரசித்துச் செய்யும் போதும் சரியாகச் செய்ய முடியும் - ஆடையையும் அழகாக நெய்ய முடியும்!

பயனுள்ள வகையில் (useful ஆக)  செய்கிறோமா என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

(இங்கே) நாம் என்ன படிக்கிறோம்?

எதற்காகப் படிக்கிறோம்?

தமிழின் மூலம் ஆங்கில இலக்கணம் (Grammar) கற்றுக் கொள்கிறோம். கட்டுரையின் தலைப்பு அதைத்தானே சொல்கிறது!

பயமில்லாமல் ஆங்கிலம் எழுதவும், பேசவும்  வேண்டுமல்லவா?

மகிழ்ச்சியாகப் படியுங்கள்!

சரி, உணவு உண்ண எவ்வளவு நேரமாகிறது?

உண்மையைச் சொல்லப் போனால் 15 நிமிடங்கள் ஆகுமா? அதை எவ்வளவு ஆசையுடன், பசியுடன் எல்லோரும் செய்கிறோம்!

அதுபோல், ஒவ்வொரு இதழிலும் ஆங்கில இலக்கணம் ஒரு 10 நிமிடங்கள் வாசியுங்கள்!  பசித்துப் புசியுங்கள், அது உங்களைச் சிறந்த முறையில் தெளிவாக்கும்.

மீண்டும் நம் நினைவிற்கு...

இதுவரை தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிந்தவை:

Articles (சுட்டிடைச் சொற்கள்), Verb (வினைச் சொற்கள்), Noun (பெயர்ச் சொற்கள்), Pronoun (பிரதிப் பெயர்ச் சொற்கள்), Tense (காலச் சொற்கள்), Voice (செய்வினை, செயப்பாட்டு வினைகள்), Preposition (முன்னிடைச் சொற்கள்),  Conjunction (இணைப்புச் சொற்கள்), Adverbs (உரிச் சொற்கள்), Degrees of Comparison    (ஒப்பீட்டு நிலைகள்) இவற்றையெல்லாம் விளக்கமாகப் படித்திருப்பீர்கள். நினைவு இல்லை என்றால் பழைய இதழ்களை மீண்டும் ஒருமுறை இப்போது எடுத்துப் பார்த்து நினைவிற் கொள்ளுங்கள்.  உங்களுக்கு (தவறில்லாமல்) ஆங்கிலத்தை தமிழின் வழியாக எளிதாகத் தெரிந்து கொள்வது என்பது ‘சட்’டெனப் புரியும் _- புரிய முயலுங்கள்!

தற்போது, நேர்க்கூற்றும் [Direct Speech], அயற்கூற்றும் [Indirect Speech] பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில்,

நேர்க்கூற்றையும் [ D i r e c t S p e e c h ],  அயற்கூற்றையும் [ I n d i r e c t S p e e c h ]  ஆசையாகவும், பசியுடனும் (விருப்பமாய்) செய்யும்போது சிறப்பாக, நிறைவாகச் செய்ய முடியும்- சரிதானே!0

வழிமுறை : 3 (தொடர்ச்சி)

Pronoun Rules

பிரிவு (இ)

‘நான்’, ‘அவனிடம்’ அல்லது ‘அவளிடம்’ உரையாடும்போது, உரையாடல் பகுதியில் (பேசுகின்ற பகுதியில்) உள்ள,

‘நான்’ ‘நான்’ ஆக இருப்பேன். (I -> I)

‘அவன்’ ‘அவன்’ ஆக இருப்பான். (He -> He)

‘அவள்’ ‘அவள்’ ஆகவும் இருப்பாள். (She -> She)

ஆனால், ‘நீ’ யாக இருந்தால் அவன்/அவள் ஆக மாறுவார்! (You -> He/She)

ஏற்கெனவே சொன்னதுதான்... மீண்டும் ஒரு முக்கியமான விவரத்தைத் திரும்பவும் சொல்கிறேன்.   ஓர் உரையாடல் சொற்றொடரை (Speech) நேர்க்கூற்றில் இருந்து அயற்கூற்றுக்கு மாற்றும் போது:

அடைப்புக்குறிக்குள் உள்ள பகுதியில் Pronoun-இல் மாற்றம் செய்யும்போது... நேர்க்கூற்றில் சொல்லப்பட்ட நபரும் (Person), அயற்கூற்றில் சொல்லப்பட்ட நபரும் (Person) அர்த்தம் மாறாமல் அதே நபராகத்தான் (Same Idendity) இருக்க வேண்டும். ... இன்னொன்றைச் சேர்த்துக் கொள்வோம்- அந்த இடத்துக்குப் பொருத்தமான Pronoun வகையாகவும் (Her, Him, His...)இருக்க வெண்டும். இதைத் தெளிவாகக் கீழே காண்போம்.

பிரிவு (இ) எ-கா:

I said to surya (Him). “You wished me a lot”

அதன் (தமிழ்ப்) பொருள்:

நான் சூர்யாவிடம் (அவருக்கு) சொன்னேன், “நீங்கள் என்னை அதிகமாக வாழ்த்தினீர்கள்”

இந்த உரையாடலில் அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதியை மட்டும் படியுங்கள்!

அதாவது....பேசப்படுகின்ற உரையாடல் பகுதியை மட்டும்!

“You wished me a lot”

“நீங்கள் என்னை அதிகமாக வாழ்த்தினீர்கள்”

இங்கே ‘நீங்கள்’ (You) என்பது யாரைக் குறிக்கிறது?

‘சூர்யா’வைத்தானே!

‘என்னை’ (me) என்பது யாரைக் குறிக்கிறது?

‘என்னை’த்தானே!

உரையாடுபவர்கள் இரண்டு பேர்தான்: 1) நான் 2) சூர்யா

இந்த உரையாடலை அயற்கூற்றுக்கு மாற்றும் போது...

I told surya that He wished me a lot

நான் சூர்யாவிடம் பகன்றேன் அவர் என்னை அதிகமாக வாழ்த்தினார் என்று.

இங்கே (அடைப்புக் குறிக்குள்) Pronounஇல் என்ன மாற்றம் நடந்தது?

பொறுமையாக ஒவ்வொரு சொற்களையும் கவனியுங்கள்!

இப்போது இந்த மாற்றத்தையும் மேலே ஙிஷீஜ்இல் உள்ள வழிமுறையை (Formula-வை)யும் ஒப்பிட்டுப் பாருங்கள்! உங்களுக்கு இந்த மாற்றம் புரியும்.

அடுத்து அட்டவணையைப் பாருங்கள்!


Share