இசைப்போம் வாரீர்! | |||
|
இன்னும் அடிமையா? இசைக் குறிப்பு: விஜய் பிரபு Scale : D minor / Sign 5/8 பாடலாசிரியர்: அதிரடி அன்பழகன் இசை: பிரபாகர், மைக்கேல்ராஜ் பல்லவி 1 இன்னும் அடிமையா பெண்கள் இன்னும் அடிமையா /மாம / மமம மா /காரி/ காக / ககககா.../ இன்னும் அடிமையா நாங்கள் இன்னும் அடிமையா? /மாம / மமம மா /காரி/ காக / ககககா / புதிய உலகம் படைக்கும் பணியில் பெண்கள் பங்கு சிறந்த பின்னும் /சாச /ரிரிரி / ககக / மமம / மாம / காக / ரிரிரி / சாச / இன்னும் அடிமையா பெண்கள் இன்னும் அடிமையா /மாம / மமம மா /காரி/ காக / ககககா / இன்னும் அடிமையா நாங்கள் இன்னும் அடிமையா? /மாம / மமம மா /காரி/ காக / ககககா / சரணம் 1 பட்டங்களைப் பெற்று நாங்கள் உயர்ந்துவிட்டோமே - உயர் /மாமமம/ கமமமாம / கமகரிக மா / கம / பதவிகளில் முத்திரையைப் பொறித்துவிட்டோமே / பாபபப / மபபபப / மபமகமபா / சட்டங்களை எழுதித் தரும் ஆற்றல் பெற்றோமே / காமதாநி / சாசசச / நிசநிதநிசா / சட்டங்களை எழுதித்தரும் ஆற்றல் பெற்றோமே / காமதாநி / சாசசச / நிசநிதநிசா / இந்தச் சாதனைகள் செய்தபின்னும் நாங்கள் அடிமையா? / சாச / நீநி / தாதமப / தாதபாமமாக மா / (இன்னும் அடிமையா) சரணம் 2 அறிவினிலே பஞ்சம் என்று நினைப்பவர் யாரோ? /மாமமம / கமமமாம / கமகரிக மா / ஆற்றலிலே கொஞ்சம் என்று சொல்பவர் யாரோ? / பாபபப / மபபபப / மபமகமபா / ஆணுக்கென்ன பஞ்சையா ஆளும் தகுதி இல்லையா? / காமதாநி / சாசசச / நிசநிதாத / தநிசா / ஆணுக்கென்ன பஞ்சையா ஆளும் தகுதி இல்லையா? / காமதாநி / சாசசச / நிசநிதாத / தநிசா / அகிலம் போற்றும் சாதனைகள் நாங்கள் நடத்தவில்லையா / சாச / நீநி / தாதமப / தாதபாமமாக மா / (இன்னும் அடிமையா) சரணம் 3 சந்திரனில் கால்பதித்து சரித்திரத்தை உயர்த்தினோம் / மாமமம / கமமமாம / கமகரிச / கமகம / சட்டமன்றப் பதவிகளில் தேர்வு பெற்று உழைக்கிறோம் / பாபபப / மபபபப / மபமகாக / மபமப / நாட்டைக் காக்கும் ராணுவத்தை நாங்கள் நடத்திச் செல்கிறோம் / காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச / நாட்டைக் காக்கும் ராணுவத்தை நாங்கள் நடத்திச் செல்கிறோம் / காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச / நயவஞ்சக சாஸ்திரத்தால் அடிமையாக வாழ்கிறோம் / சசநீதா / தாபமப / தாதபாம / மாம மா / (இன்னும் அடிமையா) சரணம் 4 அடுப்பங்கரையைப் பார்த்த நாங்கள் ஆகாயத்தில் பறக்கிறோம் / மாமமம / கமமமாம / கமகரிச / கமகம / ஆண்களையே விஞ்சி நாங்கள் அனைத்திலுமே சிறக்கிறோம் / பாபபப / மபபபப / மபமகாக / மபமப / தந்தை பெரியார் மண்டைச் சுரப்பை உலகை ஆளும் நாளிது / காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச / தந்தை பெரியார் மண்டைச் சுரப்பை உலகை ஆளும் நாளிது / காமதாநி / சாசசச / நிசநிதாத / நிசநிச /
பெண்ணடிமைச் சிந்தனைகள் செத்தொழியப் போகுது / சசநீதா / தாபமப / தாதபாம / மாம மா / அடிமையில்லையே நாங்கள் அடிமையில்லையே / தாததாத தா / பாம / பாபபாப பா / அடிமையில்லையே நாங்கள் அடிமையில்லையே / மாமமாம மா / காரி / காககாக கா / <
|