
வெவ்வே றான மொழிகளிலே வெள்ளைத் தாளில் அச்சேறும் ஒவ்வோர் நூலும் உண்மையிலே உன்றன் அறிவை உயர்வாக்கும்!
எண்ணும் எழுத்தும் பிறந்ததன்பின் எல்லோர் அறிவும் உயர்வடைய மண்ணில் இங்கே தோன்றியவை மனதைக் கவரும் புத்தகங்கள்!
பெற்ற நல்ல பேரறிவைப் பிறரும் உணரும் வகையினிலே கற்ற வர்கள் தரும்கொடையே காசி னியிலே புத்தகங்கள்!
சித்தி ரங்கள் சிற்பங்கள் சிந்த னையை மகிழ்விக்கும்; புத்தி தன்னைக் கூர்தீட்ட புத்த கங்கள் வழிகாட்டும்!
நாளும் நூல்கள் படித்திட்டால் நல்லோர் அறிஞன் ஆகிடலாம்; *தாளும் நூலும் இருந்திட்டால் தரையில் அதுவே பேரின்பம்!
புத்த கங்கள் வாசித்தல் பொழுது போக்கென் றெண்ணாமல் நித்தம் உன்றன் கடமையென நீயும் அறிந்தே உயர்ந்திடுவாய்!<
- கே.பி.பத்மநாபன், கோவை
|