
மே-1, உழைப்பாளர் நாள்
உழவும் தொழிலும் ஓங்குதற்கு உழைப்பே இங்கு முதல்தேவை; சுழலும் உலகம் நில்லாமல் சுற்றுவ தெல்லாம் உழைப்பாலே!
எறும்பு தேனீ எல்லாமே எப்போ தும்தான் உழைக்கிறதே; சுறுசுறுப் புடனே உழைப்போர்க்கே சுவைகள் மிகுந்த நலவாழ்வாம்!
சிறிய வயதில் உழைத்திட்டால் சிறந்த கல்வி பெற்றிடலாம்; குறிக்கோள் ஒன்றைக் கொண்டுழைத்தால் குவலயம் தன்னை வென்றிடலாம்!
மழைக்கா லத்தின் உணவுக்காய் மணியைச் சேர்க்கும் எறும்புகள்போல் உழைத்தே நாமும் சேமித்தால் உலகின் பசியைப் போக்கிடலாம்!
சோம்பல் தன்னை நீக்கிவிடு; சுறுசு றுப்பாய் ஆகிவிடு; ஓம்பும் உடலின் பலத்தாலே உழைத்தே நீயும் முன்னேறு!
நன்றாய் நீயிங் குழைத்திட்டால் நாடும் வீடும் நலமாகும்; தின்றே அழித்துத் தூங்காமல் தினமும் உழைத்துக் களைப்பாறு!
- கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4
|