Home முந்தைய இதழ்கள் 2022 மே 2022 தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
வியாழன், 02 பிப்ரவரி 2023
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
Print E-mail

நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 32


‘படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல்’
இந்த அலைபேசி உரையாடலைப் பாருங்கள்:
“என் சகோதரனும் உன் சகோதரியும் புத்தகக் காட்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்’’ _ கவுதமன் கலைச் செல்வனிடம் சொல்கிறான்.

நேர்க்கூற்று:
Gouthaman said to Kalai selvan, “my brother and Your sister are going to Book Exhibition”

அயற்கூற்று:

Gouthaman told Kalai selvan that His brother and his sister were going to Book Exhibition.

இதுதான் ‘படர்க்கை படர்க்கையுடன்’ பேசும் (எ.கா.) உரையாடல்’ ஆகும்.

Pronoun--கள் மாற்றத்திற்கான அட்டவணைகள் நிறைய பார்த்து விட்டோம். இறுதியாக படர்க்கை படர்க்கையுடன் பேசும் உரையாடல் அட்டவணையைக் (கீழே) பார்ப்போம்!

அதற்கு முன் வழிமுறை(Formula)  கவனியுங்கள்!


____________________________________________

‘அவன்’ ‘அவனிடம்’ பேசும்போது,
உரையாடல் பகுதியில் உள்ள
‘நீ’ ‘அவனாக’ மாறுவான்!  (you > he)
‘நான்’ ‘அவனாக’ மாறுவான்! (I > he)
ஆனால்
‘அவன்’ ‘அவனாக’வே இருப்பான்! (he > he)
‘அவள்’ ‘அவளாக’வே இருப்பாள்! (she > she)
‘அது’ ‘அதுவாக’வே இருக்கும்! (it > it)
‘அவர்கள்’ ‘அவர்களாகவே இருப்பார்கள்!
(they > they)

_________________________________________

பெட்டியில் கொடுக்கப்பட்ட வழிமுறை (Formula)  உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். ஏனேனில் நீங்களோ நானோ அல்லாத ஒருவர் வேறொருவரிடம் பேசுகிறார். எனவே இதில் நமக்குத் தொடர்பில்லை அல்லவா?

She said to her/him
என்றவாறு படர்க்கை படர்க்கையுடன் (3rd Person to 3rd Person) பேசும் உரையாடலில்...
(பேசுகின்ற) உரையாடல் பகுதியில் Pronoun (தமிழில்: பிரதிப் பெயர்ச்சொல்) வந்தாலும் I (நான்) அல்லது You  (நீ) அல்லது பிமீ, He, She, It
(அவன், அவள், அது) எது வந்தாலும்...

அந்த Pronoun படர்க்கையாக (3rd Person ஆக)  மட்டுமே மாறும்.
(ஒருமை Pronoun  ஒருமையாகவும் அதே நேரம் பன்மை Pronoun  பன்மையாகவும் வரக்கூடும் _ அட்டவணையில் அது உங்களுக்குப் புரியும்!)



Share