Home முந்தைய இதழ்கள் 2022 மே 2022 புதுமை.. புதுமை...
வியாழன், 02 பிப்ரவரி 2023
புதுமை.. புதுமை...
Print E-mail

மெய் நிகர் உலகம்

-அபி

காலையில் எழுந்ததில இருந்து நிலனுக்கு என்ன செய்யுறதுன்னு தெரியாம உக்காந்துட்டு இருக்கும் போதுதான் அவனோட கண்ணுல, மேசை மேல இருந்த head mounted display   மற்றும் VR Controller பட்டது.  உடனே போய் அதை எடுத்து மேசைக் கணினியோடு இணைத்து அதில் சில வேலைகள் செய்துவிட்டு mounted display அவனது தலையில் அணிந்து கொண்டான். head mounted display யைத் தலையில் அணிந்ததும் அவன் கண் முன்னாடி மெய்நிகர் உலகம் தோன்றியது.

மெய்நிகர் உலகமா... அப்டினா???? இப்போ இணையதளத்தின் உதவியோடு நாம இருக்குற இடத்தில இருந்து முகம் தெரியாதவங்க கிட்டகூட உரையாட முடியுதில்ல... அதுபோலவே இணையத்தளத்தின் மூலம் உட்கார்ந்த இடத்துல இருந்தே மத்தவங்களை நேர்ல சந்தித்துப் பேசவும், நம்மளோட அன்றாட வேலைகளைச் செய்யவும் இந்த மெய்நிகர் உலகத்துல முடியும். முப்பரிணாமத்தில இருக்குற இணையதளம்தான் மெய்நிகர் உலகம் (Meta verse) னு வச்சுக்கலாம்.

Virtual reality  என்பதைத் தமிழில் மெய்நிகர் உலகம்னு சொல்வோம். அதைச் சாத்தியப்-படுத்தியிருக்கிறது Meta verse.
இப்போ நிலன்கிட்ட வருவோம். அங்கு அவன் விறுவிறுப்பாக முப்பரிமாணத்தில் காணொளி விளையாட்டைக் கையில் இருந்த க்ஷிஸி VR Controllers இன் உதவியோடு விளையாடிகிட்டு இருந்தபோது அவனது நண்பர்களும் அங்கு வந்து இணைந்தனர். விளையாட்டை முடிக்கும் தருவாயில் ஓர் இசைக் கச்சேரியின் விளம்பரம் வந்ததும் எல்லாரும் அந்த இடத்திற்குப் பறந்துட்டாங்க.

நிஜ உலகத்துல பக்கத்து அறையில் இருந்த நிலனின் அம்மாவும், தலையில் head mounted display அணிந்திருந்தார். ஆனால், இவரு இசைக் கச்சேரிக்குப் போகல. மாறாக வேலையிடத்தில் ஒரு அவசரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். குறிப்புகளைக்கூட,VR Controller
மூலமே காற்றில் வரைந்துகொண்டு இருந்தார். இவரது அவசரக் கூட்டம் முடியவும் நிலன் சென்றிருந்த இசைக் கச்சேரி முடியவும் சரியாக இருந்தது. மெய்நிகர் உலகத்தை விட்டு இருவரும் வெளியே வந்து மதிய உணவை, அன்றைய நாளைப் பற்றிப் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.

என்னப்பா இது, உட்காந்த இடத்துல இருந்தே அவசரக் கூட்டத்துக்குப் போய்வந்த உணர்வோடு அம்மா அதில கலந்துக்கிறாங்க. பையன் அவன் அறையில இருந்துகிட்டே இசைக் கச்சேரியில அவனோட நண்பர்களோட சேர்ந்து உற்சாகமா நடனம் ஆடுறான்!

இதெல்லாம் எப்படி நடக்கும்? எல்லாமே மெய்நிகர் உலகத்துல சாத்தியம். பெயருக்கேற்றபடி இந்த மெய்நிகர் உலகம் நிஜ உலகத்தின் சாயலைக் கொண்டிருக்கு.

இப்போ பயன்பாட்டுல இருக்குற இணைய தளத்துக்கும் இதுக்கும் இருக்குற வேறுபாடு என்னன்னா? மெய்நிகர் உலகத்துல அனைத்தும் முப்பரிமாணத்தில் இருக்கும். ஆனால், பயன்பாட்டுல இருக்குற இணையதளம் அப்படி இல்ல. நாம் அனைவரும் மெய்நிகர் உலகத்துல அசை படத்தில் (Animation movie) வரும் பொம்மைகளைப்போல இருப்போம். ஒவ்வொரு நபருக்கும் ஒரு வடிவம் இருக்கும். அந்த வடிவத்துல நாம அந்த மெய்நிகர் உலகத்துல வலம் வரலாம். மெய்நிகர் உலகத்தில நாம நிஜமாகவே இருக்குற மாதிரியான உணர்வு வரும். இதற்குக் காரணம், நாம பயன்படுத்துற     head mounted display  மற்றும் vr controllers  உண்மையில நாம அங்க இருக்குற மாதிரி நம்முடைய மூளையைக் குழப்பமடைய வைச்சிடும்.

என்னதான் இந்தத் தொழில்நுட்பம் அண்மைக்காலமாக எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தாலும், பல ஆண்டுகளாக இதற்கான வேலைகள் நடந்துகொண்டே இருக்கு. இப்படி ஒரு தொழில்நுட்பம் வர சாத்தியம்னு எல்லாரும் நினைக்கக் காரணமாக இருந்தது, 1992இல் வெளிவந்த Snow crash எனும் அறிவியல் கதைப் புத்தகம். இந்தப் புத்தகம், மெய்நிகர் உலகத்தில நடக்கும் செயல்களைக்  கருவாக வச்சிருந்தது.
நம்ம ஃபேஸ்புக்கின் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க், 28-.08.-2021 அன்று வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் இவற்றின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றினார். அதோடு சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கும் மெட்டா தாய் நிறுவனமாக இருக்கும் என்றும் சொன்னார்.

இந்த மெய்நிகர் உலகம் காணொளி விளையாட்டுகள் மூலம் சில ஆண்டுகளாகப் பயன்பாட்டுல இருந்துட்டு வருது. 18.-04.-22 அன்று தெலுங்கானாவில் விண்வெளித் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்-கூட்டம் (Spacetech framework)
நடந்தது. இந்தக் கூட்டம் மெய்நிகர் உலகத்துல நடந்ததுதான் இதோட சிறப்பம்சமாக இருந்துச்சு. இந்தக் கூட்டத்தை யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் நேரலையில் ஒளிபரப்புனாங்க.

இப்போ பயன்பாட்டுல இருக்குற இணையதளம் முன்னொரு காலத்துல கதையாக இருந்துச்சு. பின்னர் தொழில்நுட்பமா மாறி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போ எல்லாரும் பயன்படுத்தும் நிலைக்கு வந்துடுச்சு. அதுபோலவே மெய்நிகர் உலகம் கதையாக இருந்து இப்போதான் தொழில்நுட்பம்ங்கிற பரிணாமத்தைத் தொட்டு இருக்கு. விரைவில் இதுவும் எல்லோருடைய பயன்பாட்டுக்கும் வரும். அதைப் பயன்-படுத்தணும்ன்ற ஆர்வம் உங்களுக்கும் இருக்கா?

Share