அக்டோபர் 16 - உலக உணவு நாள்

காலை உணவைத் தவிர்க்காதே; காபி தேநீர் அருந்தாதே! பாலை மட்டும் அருந்தியபின் பலகா ரத்தை உண்டிடுக!
மதிய உணவில் காய்கறிகள் மற்றும் கீரை சேர்த்திடுவாய்; அதிகப் புரதம் கொண்டிருக்கும் இறைச்சி வகைகளைத் தவிர்க்காதே!
மாலை நேரம் விளையாடி *மல்லாக் கொட்டை கடலையென வேலை செய்யப் பலமளிக்கும் விதைகள், பருப்பை உண்டிடுக!
எளிதில் செரிக்கும் உணவினையே என்றும் இரவில் உண்டிடுக; புளியை, உப்பை, காரத்தைப் பொதுவாய்க் குறைத்தே உண்டிடுக!
மட்ட ‘துரித’ உணவினிலே மயங்கா தென்றும் இருந்திடுக; திட்ட மிட்டே உண்டிடுக; தேக வலிமை போற்றிடுக!
வாயின் சுவைக்காய்க் கண்டதையும் வாரி வாரி உண்ணாமல் நோயில் நொடியில் வீழாமல் நீண்ட காலம் வாழ்ந்திடுக!
- கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
|