Home முந்தைய இதழ்கள் 2022 நவம்பர் 2022 சுட்டிக் குழந்தை
ஞாயிறு, 04 ஜூன் 2023
சுட்டிக் குழந்தை
Print E-mail

ன்னை இடுப்பில் பவனி வர அடம்பிடிக்குது
அத்தைமகன் காதைத்திருகி அழுகையாக்குது
சுடுநீரில் குளியல் என்றால் நடு... நடுங்குது
சேற்றை வாரி... சந்தனமாய் பூசிக்கொள்ளுது

மரக்குதிரை மேலமர்ந்து பழிப்பு செய்யுது
மாமாவின் முதுகை “உப்புமூட்டை” ஆக்குது
புரியாத மொழியாலே பேசி மயக்குது
“பூச்சாண்டி” பேரைக் கேட்டா எதிர்த்து நிக்குது

கையில் கிடைத்த பொருளையெல்லாம் ருசித்துப் பாக்குது
கிண்ணத்திலே சோறுஉண்ண ஊரைக் கூட்டுது
பட்டாம்பூச்சியாக வீட்டில் சிறகடிக்குது
பாட்டி சொல்லும் கதையைக் கேட்டு கண்ணுறங்குது

நாய்க்குட்டியைக் கட்டிப்பிடித்து பாசம் பொழியுது
நகர்ந்து செல்லும் பூச்சியை விளையாட அழைக்குது
மத்தாப்பு சிதறல்போல சிரிப்பு இருக்குது
மனசிலுள்ள கவலையெல்லாம் மறைந்து போகுது.

- ‘சோழா’ புகழேந்தி,
கரியமாணிக்கம்


Share