
வானை உரசிடும் வகையினில் உயர்ந்திடும் வனத்துள பெருங்குடை மரங்கள் - புலி ஆனை, கரடிகள் அரளவும் மிரளவும் அசைத்திடும் பசுந்தழைச் சிரங்கள்!
தேனின் மலர்களைத் தெருமண் குடில்களைத் திருகிடும் கடும்புயற் கரங்கள் - புவி ஈனப் பதரென இழுத்துப் புடைத்திடும் எழுந்ததன் கொடுங்கள முறங்கள்!
மானும், மயில்களும், மடவார் அனங்களும் மருண்டிடும் இருண்டிடும் முகங்கள் - கதிர், கூனற் பிறையுடன் குளிர்விண் மணிகளைக் குடைந்திடும் புயல்விரல் நகங்கள்!
கானை, மலைகளைக் கடலுடன் நதிகளைக் கலக்கிடும் செயலதன் குணங்கள் - இரு சேனை பொருதபின் சேர்ந்திடும் பிணமெனச் சேர்ந்திடும் புயலிலும் பிணங்கள்!
பூணும் புயல்வெறிப் போரினில் பெருஞ்சதம் புவியினில் அழிந்திடும் நலங்கள் - பினர் காணும் சிறுசதம் களையிழந் தொருவிதக் கவலையுள் அமிழ்ந்திடும் கலங்கள்!<
தளவை இளங்குமரன் இலஞ்சி
|