Home முந்தைய இதழ்கள் 2019 ஜனவரி 2019 அல்லும் பகலும் உழைத்திடடா!
புதன், 28 அக்டோபர் 2020
அல்லும் பகலும் உழைத்திடடா!
Print E-mail

உழைப்பால் உலகை வென்றிடலாம்

உண்மை! இதனை அறிந்திடுவீர்!

உழைப்பால் முடியா செயலென்று

உலகில் எதுவும் இல்லையென்பீர்!

 

அடிமேல் அடிகள் அடித்திட்டால்

அம்மிக் கல்லும் நகர்ந்திடுமே!

தொடர்ந்து முயற்சிகள் செய்திட்டால்

தோல்வியும் ஓடி மறைந்திடுமே!

 

எதிலும் முதன்மை பெற்றிடவே

எழுச்சிக் கொண்டு எழுந்திடுவீர்!

எதிலும் வெற்றியைக் குவித்திடுவீர்!

அல்லும் பகலும் உழைத்திடுவீர்!

தங்க.சங்கரபாண்டியன்

Share