Home முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 நியூசிலாந்து
சனி, 31 அக்டோபர் 2020
நியூசிலாந்து
Print E-mail

உலக நாடுகள்

சந்தோஷ்

அமைவிடமும் எல்லைகளும்:

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.

நியூசிலாந்து மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த மிகப் பெரிய தீவுக் கூட்டமாகும்.

பரப்பளவு: 2,68,680 சதுர கிலோ மீட்டர்கள்.

வடக்குத் தீவும் தெற்குத் தீவும் முக்கியமான நிலப் பரப்புகளாகும்.

22 கிலோ மீட்டரைக் கொண்ட கிக் நீரிணை வடக்கு, தெற்குத் தீவுகளைப் பிரிக்கிறது.

தலைநகரம்: வெலிங்டன்

வடக்கே நியூ கலிடோனியா, பிஜி, தொங்கா ஆகிய பசிபிக் தீவுகள் உள்ளன.

புவியியல்:

25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தட்டுப் புவிப்பொறை (Tectonic plates) இயக்கங்கள் காரணமாக நியூசிலாந்து இரண்டு பகுதிகளாக இழுக்கப்-பட்டது.  குக்தீவுகள், நியுவே, தொக் கேலாவு தீவுகள் நியூசிலாந்தின் ஆட்சிக்குள் அடங்கியுள்ளன.

புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனித்துள்ளது.

நியூசிலாந்து மாறுபட்ட இட அமைப்பியலும் கூர்மையான மலை உச்சிகளும் கொண்ட நாடு.

இங்கு நிலங்களின் கண்டத்தட்டுப் பெயர்வு மற்றும் எரிமலைக் குமுறல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

வடக்குத் தீவில் உள்ள ருவாப்பேகூ ஓர் இயக்கமுள்ள எரிமலையாகும்.

நியூசிலாந்து தாஸ்மான் கடலுக்கு குறுக்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு கிழக்கே 1,500 கிலோ மீட்டர்களுக்கு வடக்கேயும், தெற்கே ஏறத்தாழ 1000 கி.மீ. தூரத்துக்கப்பாலும் அமைந்துள்ளது.

நீண்டகாலத் தனிமையின் காரணமாக நியூசிலாந்தில் பறவைகள், தனித்துவமான விலங்கினங்கள், பூஞ்சைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன.

ஆக்லாந்து அதிக மழை பொழியும் பகுதியாகும். பெரும் பகுதிகள் குளிரும், மேகமூட்டமும் கொண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.

பெயர் வரலாறு:

டச்சு நாட்டுப் பயணி ஏபெல் டாஸ்மான் 1642ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டு அதற்கு Staten Landt எனப் பெயரிட்டார்.

1645இல் டச்சு நிலப்பட வரைவாளர்கள் டச்சு மாகாணமான சீலாந்து (Zeeland) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு நோவா சீலாந்தியா (Nova Zeelandia) எனப் பெயரிட்டனர்.

பிரிட்டிஷ் கேப்டன் ஜேம்ஸ் குக் இதே பெயரை ஆங்கிலப்படுத்தி நியூசீலாண்ட் (New Zealand) என அழைத்தார்.

வரலாறு:

கி.பி.1250-_1300களில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாச்சாரத்தைப் பேணி வந்தனர்.

கி.பி.1769இல் பிரித்தானிய மாலுமி ஜேம்ஸ் குக் கரையோரப் பகுதி முழுவதையும் சுற்றி வந்தார். 1801 முதல் 1840ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உள்ளூர் மாவோரிகளிடையே அதிகமான போர்கள் நடைபெற்றன. உள்நாட்டுப் போரில் 30,000 முதல் 40,000 வரையான மாவோரிகள் கொல்லப்பட்டனர். அதன்பின் நியூசிலாந்து பிரிட்டன் கைக்கும் சென்றது.

1860 முதல் 1870 வரை குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நிலம் தொடர்பான சர்ச்சைகளினால் போர் நடைபெற்றது.

மாவோரிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

1907ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஏழாம் எட்வர்ட் மன்னர் நியூசிலாந்தை பிரிட்டிஷ் பேரரசின் கீழ் மேலாட்சி அரசு முறையை அறிவித்தார். இன்றும் அய்க்கிய ராஜ்ஜியம் (United Kingdom) எனப்படும பிரிட்டனின் அரசி ராணி எலிசபெத் தான் நியூசிலாந்தின் தலைவராவார்.

நியூசிலாந்து பிரிட்டிஷ் பேரரசுடன் இணைந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் போரிட்டது.

பொருளாதாரம்:

நியூசிலாந்து நவீன, வளமையான, வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.

நியூசிலாந்தின் நாணயம் கிவி டாலர் அல்லது நியூசிலாந்து டாலர் என அழைக்கப்படும்.

தேசிய உற்பத்தியில் 24% ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதிப் பொருட்களில் வேளாண்மை, தோட்டப்பயிர், மீன்பிடித் தொழில், வனத்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவை முக்கியமானவை.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அய்ரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஏற்றுமதியில் முதன்மைப் பங்கேற்கின்றன.

பொருளியலில் சேவைத்துறை முதன்மை வகிக்கின்றது.

பால்பொருட்கள் ஏற்றுமதியில் 21 விழுக்காடாக உயர்ந்து வருகிறது. திராட்சைத் தோட்டங்களும், மதுவும் உற்பத்தி ஏற்றுமதியில் முதன்மைப் பெறுகின்றன.

1990இல் தாராளமயமாக்கப்பட்ட கட்டற்ற பொருளியலுக்கு மாறி முன்னேற்றம் கண்டுவருகிறது.

மொழியும் மக்களும்:

நியூசிலாந்தின் மக்கள் தொகை 4.596 மில்லியன்.

மக்கள் தொகை தரவரிசையில் 122ஆவது இடம்.

ஆட்சி மொழிகள் ஆங்கிலம், மாவோரி, நியூசிலாந்து சைகை மொழி.

மக்கள் தொகையில் அய்ரோப்பியர் 74%, மாவோரி 14.9%, ஆசியர் 11.8%, பசிபிக் மக்கள் 7.4%, ஏனையோர் 1.7% உள்ளனர்.

தேசியப் பறவை கிவி பறவை. பிரபலமான உணவு பாவ்லோவா.

அரசுமுறை:

அரசுத் தலைவர் இரண்டாம் எலிசபெத்.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், ஆளுநர் டேம் பாட்சி ரெட்டி.

15 மாநிலங்களை உள்ளடக்கிய நாடு.

நாடாளுமன்றத் தேர்தல் முறையில் கூடுதலாக வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெல்வதாக அமைந்திருந்த நடைமுறை 1996ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

1996ஆம் ஆண்டு முதல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை நமுறைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் தரப்படுகின்றன. ஒன்று தொகுதிக்கானது, மற்றது கட்சிக்கானது.

பிரதமரின் ஆலோசனைக்கேற்ப ராணியால் நியமிக்கப்படும் தலைமை ஆளுநரே ராணியின் பிரதிநிதியாவார்.

ஆளுநர் அரசியின் அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரமுள்ளவர்.

நெருக்கடி காலத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல், சட்டமாக்க அனுமதி வழங்க, மறுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஆளுநர் எடுக்கவல்லவர்.

பெரும்பான்மையினர் ஆதரவு இல்லாத நிலையில் கூட்டணி அரசு அமைக்கப்படுகின்றது.

பிரதமரின் தலைமையில் செயல்படும் அமைச்சர்கள் பிரதமரின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

நீதிபதிகளும், நீதிமன்ற அலுவலர்களும் அரசியல் சார்பற்று நியமிக்கப்படுகின்றனர்.

போக்குவரத்து கட்டமைப்பு:

நியூசிலாந்தின் போக்குவரத்துக்கு 94000 கி.மீ. நீள சாலைகளும், 199 கி.மீ நீளமுள்ள விரை சாலையும், ரயில்வேக்களும் உதவுகின்றன.

முதன்மை நகரங்களும் ஊர்களும் பேருந்துச் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன.

மக்களிடம் தனிநபர் மகிழுந்து முதன்மை இடம் பெறுகிறது.

ரயில் போக்குவரத்து அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

ஆறு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன.

தொலைத் தொடர்புக் கட்டமைப்பில் உலக தரப்பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளது.

முக்கிய சுற்றுலாத் தளங்கள்:

வடகிழக்கில் உள்ள கொரோமண்டல் தீபகற்பத்தில் (Coromandel Peninsula) உள்ள தேனீக்கள் ஆய்வு மற்றும் இயற்கை அதிசயங்கள் நிறைந்த காடுகள்.

`ஃபியோர்ட்லேண்ட் (Fiord Land) தேசிய பூங்கா

தென்கிழக்கில் உள்ள குயின்ஸ்டவுன் (Queens Town) வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சாகச மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுக்குப் பெயர் பெற்றது.

ஸ்கை டவர் என்பது நியூசிலாந்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு  கோபுரம். உலகின் 23ஆவது உயரமான கோபுரமாகும். இந்தக் கோபுரம் வானிலையின் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரையில் நேப்பியர் நகரத்தின் டெகோ கட்டிடக் கலைக்கு பெயர் பெற்ற கட்டிடங்கள், சிலைகள். மில்ஃபோர்ட் சவுண்ட் (Milford Sound) என்னும் புகழ்வாய்ந்த சுற்றுலாத் தளம்.

சுவையான தகவல்கள்:

நியூசிலாந்தின் தேசிய விளையாட்டு கால்பந்தாட்டமாகும்.

நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியை ப்ளாக் கேட் என கிரிக்கெட் பிரியர்கள் அழைப்பர்.

1893இல் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்த முதல் உலக நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2005_-2006ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் உயரிய பதவிகள் அனைத்திலும் பெண்கள் மட்டுமே பதவியிலிருந்த உலகின் ஒரே நாடாக நியூசிலாந்து விளங்கியது. உலகில் ஊழலற்ற நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

மக்களாட்சி ஜனநாயகத்தில் உலகின் தரவரிசையில் அய்ந்தாவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்தின் தேசிய பழம் கிவி பழம் (Kiwi Fruit). தேசிய மலர் கோவாய் (Kowhai), தேசிய விலங்கு ஆப்டெரிக்ஸ் எஸ்பி (Apteryx sp), தேசிய மரம் சில்வர் பெர்ன் (Silver Ferm).

2014 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது (Runner) இடத்தைப் பெற்றதே கிரிக்கெட்டில் அதிகப் பட்ச வெற்றி.

Share