சாதனை செய்வது கடினமா?
Print

கயிரா போஹ் கேட்கிறார்

சரா

நாம் ஊடகங்களில் சாதனையாளர்களைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். அப்போது பொதுவாக அனைவரது உள்ளத்திலும் ஓர் ஏக்கம் எழும். நாமெல்லாம் இப்படி ஆக முடியுமா? என்ற கேள்வியும் சேர்ந்து வரும். ஒரு துறையில் சிறந்தவர்கள் முக்கியமான ஒரு நிகழ்வைச் செய்து முடிக்கும்போது அதன் இறுதி விடைதான் சாதனை என்று நாம் நினைக்கக் கூடாது. உண்மையில் சாதனை என்பது மிகவும் சாதாரணமானது. ஆனால் அது கடின உழைப்பால் வருவது. இந்த உலகில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; குறைந்தவர்களும் அல்ல. மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருமே சாதனை படைக்கப் பிறந்தவர்கள்தான்.

அவரவர் செயல்களே சாதனைகளாக மாறும். சிங்கப்பூரைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம் வசதியுள்ளவர்கள் அங்கே சென்று பார்த்து வந்திருப்பார்கள். அண்மையில் சிங்கப்பூரின் விளம்பரத் தூதராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூரின் விளம்பரத் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் உண்மையில் பெரிய சாதனையாளராக இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் அவர் சாதனையாளர் தான். தான் விரும்பிய ஒரு விளையாட்டை சிறுவயதில் இருந்து ஈடுபாடுடன் விளையாடி, அதில்  அவர் மிகவும் திறமையாளராக இருந்தார். காற்றில் மிதக்கும் விளையாட்டு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு குறுகிய உயரமான வட்டமான கண்ணாடிக் கூண்டு ஒன்றில் கீழிருந்து மிகவும் வேகமாக செயற்கையாக காற்றுவீசும்படி செய்திருப்பார்கள். அந்தக் கூண்டின் உள்ளே இருப்பவர் காற்றில் மிதந்துகொண்டு சாகசம் செய்வார். பார்ப்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றும். இந்த விளையாட்டு மிகவும் அபாயகரமான விளையாட்டு ஆகும். காற்றில் மிதப்பவர்கள் சிறிது நிலை தடுமாறினாலும் கீழே விழுந்து பலத்த காயமடையும் விளையாட்டு. இந்த விளையாட்டில் தன்னுடைய 10-ஆம் வயதில் இருந்தே கையிரா போஹ் மிகவும் திறமைசாலியாக இருந்தார். உலக அளவில் இந்த விளையாட்டில் பல பதக்கங்களை வென்றார்.

Indoor Sky Diving என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டைத் தற்செயலாக ஒரு பொழுதுபோக்கு கேளிக்கை மையத்திற்கு சென்றபோது  விளையாடினார். அதன் பிறகு இவர் அந்த விளையாட்டில் தேர்ச்சி பெற்று இன்று சிங்கப்பூர் நாட்டின் விளம்பரத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இப்போது சொல்லுங்கள் சாதனை செய்வதற்கு என்ன வேண்டும்?

Share