Home முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி!
சனி, 31 அக்டோபர் 2020
விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி!
Print E-mail

வீட்டுக் குள்ளே நட்சத்திரம்

கண் சிமிட்டுது - அது

விண்வெளியில் இருந்து இங்கே

எப்போ வந்தது?

 

பறந்து பறந்து அறைமுழுக்க

வெளிச்சம் காட்டுது - அதைப்

பார்க்கும் கண்கள் அதிசயத்தில்

அகல விரியுது!

 

எட்டிப் பிடிக்க முயலும்போது

தப்பி ஓடுது - நான்

சற்றுநேரம் உற்றுப் பார்த்தால்

கணத்தில் மறையுது!

 

வண்ண விளக்கைக் கையில் ஏந்தி

என்ன தேடுது? - அதை

அறிந்து நானும் உதவிசெய்ய

ஆவல் பெருகுது!

மு.நடராசன், புதுச்சேரி

Share