Home முந்தைய இதழ்கள் 2019 மார்ச் 2019 உலக நாடுகள்
திங்கள், 26 அக்டோபர் 2020
உலக நாடுகள்
Print E-mail

நார்வே

சந்தோஷ்

அமைவிடமும் எல்லையும்:

அய்ரோப்பாவின் ஸ்கான்டிநேவிய தீபகற்பத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள நாடு நார்வே.

நார்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நிலப்பரப்பைக் கொண்டது.

வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நார்வே கடல், தெற்கே வடகடல் ஆகிய-வற்றையும், சுவீடன், பின்லாந்து, ரஷ்யா நாடுகளையும் நில எல்லையாகக் கொண்டுள்ளது.

வடமேற்குப் பகுதியிலுள்ள யான்மாயன் தீவும், சுவால்பார்ட் தீவும் ரஷ்யாவின் உடன்-படிக்கையில் உட்பட்டாலும், நார்வேயின் அரசுரிமைக்குக் கீழ் இயங்குகிறது.

உலகிலேயே மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது.

புவியியல்:

நார்வேயின் மொத்த நிலப்பரப்பு 3,85,199 சதுர கிலோ மீட்டர்கள்.

தீவுக் கூட்டமான யான்மாயன் 377 சதுர கி.மீ., சுவால்பாத்தின் நிலப்பரப்பு 61,020 சதுர கி.மீ ஆகவும் அமைந்துள்ளது.

நார்வே மிக அதிகளவில் மலைகளைக் கொண்டுள்ளது.

தலைநகரம் ஒஸ்லோ (Oslo) நகரம், இது நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.

பேர்கன் (Bergen) நார்வேயின் இரண்டாவது பெரிய நகரமாகும். ஒஸ்லோவுக்கு முன் பல நூற்றாண்டுகள் தலைநகரமாக இருந்தது.

மக்களும் மொழியும்:

அய்ரோப்பாவில் குறைந்த மக்கள் தொகை அடர்த்தியுடைய நாடு நார்வே.

மக்களில் அதிகமானோர் பின் இனத்தை சேர்ந்தவர்கள்.

நாட்டில் 94% பேர் கிறிஸ்தவர்கள்.

ஆட்சி மொழிகள் நார்வே மொழி, பூக்மோல் மற்றும் நீநொர்ஸ்க். 6 நகரங்களில் சாமி (Sami) மொழியும் பேசப்படுகிறது.

மக்கள் தொகை 5,109,056 கோடி. மக்கள் தொகை தர வரிசையில் 116ஆவது நாடு.

நார்வேயில் வெளிநாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்-களின் எண்ணிக்கை அதிகமானது.

சுவீடன், போலந்து, பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகமான அளவில் குடியுரிமை பெற்று வாழ்கின்றனர்.

நார்வேயில் 24% மாணவர்கள் அகதிகளாக  தஞ்சமடைந்துள்ளனர்.

அரசு முறை:

விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைப் பின்பற்றித் தேர்தல் நடத்தப்படுகிறது.

அரசியல் அமைப்புச் சட்ட முடியாட்சி முறையில் செயல்படுகிறது.

மன்னராக ஹாகோன் (Haakon) அவர்களும், பிரதமராக எர்னா சோல்பெர்க் (Erna Solberg) அவர்களும் பதவி வகிக்கின்றனர்.

உணவு:

மாட்டு இறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சி, மான் இறைச்சி ஆகியவை முக்கிய உணவு.

காய்கறிகளும் தக்காளிச்சாறும் சேர்த்துச் சமைக்கும் உணவு சிறப்புப் பெற்றது.

பொருளாதாரம்:

நாட்டின் நாணயம் நார்வே குரோனர் என அழைக்கப்படுகிறது.

உருக்கு, செம்பு, துத்தநாகம், நிலக்கரி போன்றவற்றை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

சவுதி அரேபியா மற்றும் இரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பெட்ரோலிய உற்பத்தி செய்யும் நாடு. பொருளாதார வளர்ச்சிக்கு பெட்ரோலிய பொருட்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

99% நீர் மின் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகிலேயே சால்மன் மீனை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு நார்வே.

சுவையான தகவல்கள்:

நார்வே மக்கள் ஜனநாயகத்தை பின்பற்றுவதில் முதலிடத்தில் உள்ளனர்.

கல்வி அறிவு பெற்றவர்கள் நூறு சதவிகிதம் உள்ள நாடு.

பூமியின் 23 டிகிரி சாய்வின் காரணமாக அதிக நேரம் சூரிய ஒளிவீசும். இரு துருவத்திலும் தட்டையான பகுதி உள்ளது. அதன் காரணமாக வடக்கு நார்வேயில் நள்ளிரவிலும் சூரியன் உதிக்கும் நாடு என்று சிறப்பிக்கப்படுகிறது. அங்கு சூரியன் மறைவது இல்லை.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் நடந்தபோது, இந்தப் போரை நிறத்துவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தையின் தூதுவராக நார்வே வெளியுறவுத் துறை அதிகாரி ஏரிக் சோல்ஹெய்ம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உலகில் அமைதியை நிலைநாட்ட நோபல் அமைதி மையம் அமைக்கப்பட்டு போர், அமைதி, பண்பாடு, கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் அரங்கமாகச் செயல்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவை முக்கிய பண்டிகையாகும்.

உலகின் மகிழ்ச்சியான மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அமைதி நாடு என அழைக்கப்படும் நார்வே உலகில் எந்தப் பிரதேசத்தில் போர் நிகழ்ந்தாலும் அங்கே சென்று அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

கடல் நீரேரிகள் அதிகம் உள்ள நாடு.

மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்டு நோக்கும்போது, பல ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் நாடாகும்.

நார்வேயின் தேசியச் சின்னம் சிங்கம்.

நார்வேயின் பொதுப் பல்கலைக்கழகங்களில் உலகில் உள்ள எந்த மாணவரும் இலவசமாகக் கல்வி கற்கலாம்.

ஜூன், ஜூலை மாதங்களில் அங்கு நாள் முழுவதும் பகலாகத்தான் இருக்கும்.

மத உணர்வு நீங்கி, மதம் சாராத நாடாக நார்வே விளங்குகிறது.

உலகின் மிகப் பெரிய சேமிப்பு நிதியாக எண்ணெய் நிறுவனத்தின் 51% பங்குகள் அரசிடமே உள்ளது. இது அரசின் சேமிப்பு நிதியாக பாதுகாக்கப்படுகிறது.

விளையாட்டு:

உலக செஸ் சாம்பயன்ஷிப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் புகழ்பெற்றவர். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை நான்கு முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

நார்வேயின் தேசிய விளையாட்டு ஸ்கீயிங் (Skiing) என்னும் பனிச்சறுக்கு விளையாட்டு ஆகும்.

கால்பந்து ஆட்டமும் புகழ்பெற்ற ஒன்றாகும்.

ஸ்கேட்டிங், ஸ்கீஜம்ப் என்னும் விளையாட்டுகளில்  முன்னணி வகிக்கிறது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள்:

வடக்கு நார்வேயில் உள்ள டிராம்சோயா தீவில் அமைந்துள்ள மர வீடுகள் மற்றும் இயற்கைச் சூழல் புகழ்பெற்றவை. இங்குள்ள மீன் பொலாரியா மற்றும் போலார் அருங்காட்சியகம் ஆகியன பிரபலமாக உள்ளன.

ஜேட்டூனிஹென் தேசியப் பூங்கா (Joutuheimen National Park) பனிச்சறுக்கு மற்றும் மலை ஏறுதல் போன்ற இடங்கள் சுற்றுலா பயணிக்கு மகிழ்ச்சி தரக்கூடியன.

அவால்பார்ட் (Avalhard) என்பது கடலுக்கு இடையில் அமைந்துள்ள தீவுகளின் தொகுப்பாகும். துருவக் கரடிகள், துருவ நரிகள், திமிங்கலங்கள் மற்றும் வால்ரஸ்கள் போன்ற விலங்குகள் காணப்படுகிறது.

வொரிங் ஃபோசன் (Voring Fossen) நார்வேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான ஒன்று.

வைகிங் ஷிப் மியூசியம் (Viking Ship Museum) ஒஸ்லோவில் உள்ள பைக்டோவில் அமைந்துள்ளது. இங்கு கலாச்சார வரலாற்றின் முக்கிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்-பட்டுள்ளது.

Share