Home முந்தைய இதழ்கள் 2019 மார்ச் 2019 ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!
திங்கள், 26 அக்டோபர் 2020
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!
Print E-mail

பயனாய் வாழ்வைக் கழித்திடு - தம்பி

பயத்தைப் போக்கி வளர்ந்திடு

நயமாய்ப் பேசக் கற்றிடு - தம்பி

நன்மைகள் செய்ய எண்ணிடு!

காலம் போற்றி வாழ்ந்திடு - தம்பி

கனிவுடன் நாளும் திகழ்ந்திடு

ஞாலம் போற்ற உயர்ந்திடு - தம்பி

ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!

அன்பைத் தூவி விதைத்திடு - தம்பி

அறிவைப் பெற்று மகிழ்ந்திடு

பண்பை வளர்த்துக் கொண்டிடு - தம்பி

பாரை உயர்த்தத் துடித்திடு!

தங்க.சங்கரபாண்டியன்

Share