செய்து அசத்துவோம்
Print

அழகிய அஞ்சல் பெட்டி

வாசன்

தேவையான பொருட்கள்:

1. காலியான அட்டைப்பெட்டி, 2. கத்தரி, 3. தூரிகை, 4. பென்சில், 5. போஸ்டர் கலர். (மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம்) 1.   முதலில் காலி அட்டைப்பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. படம் 2இல் உள்ளதுபோல அட்டைப் பெட்டியின் ஒரு பக்கத்து அட்டையில் ஒட்டகச் சிவிங்கியின் உருவத்தை வரைந்து கொள்ளுங்கள்.

3. படம் 3இல் உள்ளதுபோல் பெட்டியின் எல்லா பக்கங்களிலும் மஞ்சள் நிறத்தை அடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒழுங்கற்ற வட்டங்களை வரைந்து அதில் பழுப்பு நிறத்தை அடியுங்கள்.

4. பிறகு படம் 4இல் உள்ளதுபோல கத்தரி கொண்டு வெட்டி எடுத்து விடுங்கள்.

5. இப்பொழுது ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தோடு கூடிய அழகிய அஞ்சல் பெட்டி தயார்.

6. அதில் அஞ்சல்களைப் போடுங்கள்.

என்ன பிஞ்சுகளே! செய்து அசத்துவீர்களா?<

Share