உழைத்து உண்க !
Print

வள்ளிப் பாட்டிக் கடையிலே

வாங்கி வந்த வடையுடன்

துள்ளிப் பறந்த காகமும்

சோலை மரத்தில் அமர்ந்தது!

 

வந்த மர்ந்த காகத்தை

வஞ்ச நரியும் கண்டது;

’சிந்து பாடும் காகமே!

சிறிது பாடு’ என்றது!

 

குள்ள நரியின் சூதினை

குறிப்பில் உணர்ந்த காகமும்

மெல்ல வடையை கால்களில்

மிதித்துக் கொண்டு பாடுமே.

 

’கரிய மேனி காகம்நான்

கருத்து ஒன்று சொல்லவா?

உரிமை யோடு உண்ணவே

உழைக்க வேண்டும் அல்லவா?’

பொதட்டூர் புவியரசன்

Share