வாங்க ‘விடுதலை’ தாத்தா! | |||
|
வாங்க வாங்க விடுதலை தாத்தா! வாங்க, வாங்க! வாங்கி வந்தோம் ஒரு மாலை வாங்கிக் கொள்வீர் எங்கள் தாத்தா!
எண்பத்தைந்து வயதிலுமே எப்படி ஜோரா நடக்கிறீங்க...! எதிர்த்து வரும் ஆரியத்தை எப்படி ஜோரா மடக்கிறீங்க...! - வாங்க வாங்க... உங்கள் பேனா அணுகுண்டு ஊரைத் திருத்தும் பேருண்டு - ஜாதி வெறிக் கூட்டத்துக்கோ வீசி எறியும் வெடிகுண்டு! - வாங்க வாங்க... உங்கள் பேனா எரியீட்டி எங்களுக்கோ வழிகாட்டி - உயிரைக் குடிக்கும் மதங்களுக்கோ சீறிப்பாயும் குத்தீட்டி! - வாங்க வாங்க... தென்றலாகவும் வீசுகின்றீர் - வாழ்வியல் சிந்தனைத் தேனையும் தருகின்றீர் தீப்பந்தாகவும் மாறுகின்றீர் - தீய சழக்குகளை பொசுக்குகின்றீர் - வாங்க வாங்க... வீட்டுக்கு வீடு நீ வந்தால் விளக்கு வெளிச்சம் தேவையில்லை! நாட்டுக்கெல்லாம் தெரு விளக்கு பாட்டன் நீதான் விடுதலையே! - கவிஞர் கலி.பூங்குன்றன்
|