வாங்க ‘விடுதலை’ தாத்தா!
Print

வாங்க வாங்க

விடுதலை தாத்தா!

வாங்க, வாங்க!

வாங்கி வந்தோம் ஒரு மாலை

வாங்கிக் கொள்வீர்

எங்கள் தாத்தா!

 

எண்பத்தைந்து வயதிலுமே

எப்படி ஜோரா நடக்கிறீங்க...!

எதிர்த்து வரும் ஆரியத்தை

எப்படி ஜோரா மடக்கிறீங்க...!

- வாங்க வாங்க...

உங்கள் பேனா அணுகுண்டு

ஊரைத் திருத்தும் பேருண்டு - ஜாதி

வெறிக் கூட்டத்துக்கோ

வீசி எறியும் வெடிகுண்டு!

- வாங்க வாங்க...

உங்கள் பேனா எரியீட்டி

எங்களுக்கோ வழிகாட்டி - உயிரைக்

குடிக்கும் மதங்களுக்கோ

சீறிப்பாயும் குத்தீட்டி!

- வாங்க வாங்க...

தென்றலாகவும் வீசுகின்றீர் - வாழ்வியல்

சிந்தனைத் தேனையும் தருகின்றீர்

தீப்பந்தாகவும் மாறுகின்றீர் - தீய

சழக்குகளை பொசுக்குகின்றீர்

- வாங்க வாங்க...

வீட்டுக்கு வீடு

நீ வந்தால்

விளக்கு வெளிச்சம்

தேவையில்லை!

நாட்டுக்கெல்லாம்

தெரு விளக்கு

பாட்டன் நீதான்

விடுதலையே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Share