Home முந்தைய இதழ்கள் 2019 ஆகஸ்ட் 2019 சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே!
வியாழன், 19 செப்டம்பர் 2019
சிறுவர் பாடல்! - சோர்வு கூடாதே!
Print E-mail

சோர்ந்து நீயும் இருந்துவிடாதே

சோம்பல்தான் வளரும் - உன்னைச்

சார்ந்து இருக்கும் நண்பருக்கென்றும்

சங்கடமே விளையும்.

 

மேகம் வானில் சோர்ந்து நின்றால்

மழைதான் பொழிந்திடுமா? - நல்ல

யோகம் வரட்டும் என்றே இருந்தால்

உயர்வு எட்டிடுமா?

 

முயற்சி செய்தால் வாழ்வில் எவரும்

முன்னே சென்றிடலாம் - மறுத்து

அயற்சி கொண்டால் புகழை இழப்பர்

அன்றே சொல்லிடலாம்.

 

பாயும் நீரின் சுறுசுறுப்பால் தான்

பயிர்கள் செழித்திருக்கு - இங்கு

நீயும் நானும் சுறுசுறுப்பானால்

நிச்சயம் ஜெயித்திடலாம்!

 

- அருப்புக்கோட்டை செல்வம்

Share