கிலி பிடித்தது கிளி ஜோசியருக்கு!
Print

சார், சார்... போற வழியில கொஞ்சம் விட்டுடுங்க...

சரிங்க... என்பதற்குள் அந்த "கிளி ஜோதிடர்" வண்டியில  உட்காந்துட்டார்!

வண்டி நகரத் தொடங்கியதும், “எங்க வரைக்கும் போறீங்க சார்’’ என்றார்! “தெரியலைங்க, மேப் காட்டும் இடத்துக்கு போறேன்’’னு சொன்னேன் ...

“எங்கபோறீங்கனு மேப்ல இருக்கும்ல’’னு அவரு எதார்த்தமா சொல்ல, நானும் பதார்த்தமா அத்தாதாதா... கையில வச்சி இருக்கிங்கல்லலல...  கிளி... அதைக் கேட்டு சொல்லுங்கனு சொன்னேன்...

என்ன நினச்சாருனு தெரியல அந்த மனுசன் "சார், சார் வண்டிய நிறுத்துங்கனு சொன்னார்" சரினு சடன்பிரேக்போட்டு நிறுத்துனா...

அவருபாட்டுக்கு வேகமா திரும்பிக்கூட பாக்காம போயிட்டாரு...

இன்னாவா இருக்கும்...?

- அறிவழகன்  சி.எம்.

கமெண்ட்:

“என்னா இருக்கும்?  கிளியை வச்சு எதையும் கண்டுபிடிக்க முடியாதுங்கிறதை சொல்லாம சொல்லிட்டுப்

போயிட்டார்’’

Share