Home முந்தைய இதழ்கள் 2019 செப்டம்பர் 2019 செப்டம்பர் 16 - உலக அமைதி நாள்
ஞாயிறு, 08 டிசம்பர் 2019
செப்டம்பர் 16 - உலக அமைதி நாள்
Print E-mail

அமைதி காப்போம்!

‘அணுவை ஆக்கப் பணிக்கன்றி

அழிவுக் காகக் கொள்ளாதீர்’

அணுவின் ஆற்றல் அறிந்திட்ட

அய்ன்ஸ்டின் அன்றே உரைத்திட்டார்;

 

குறுக்கு வழியில் செல்கின்ற

கொடியோ ருக்குத் துணையாகச்

சிறுத்த மதியோர் செய்திட்டார்

சீறி அழிக்கும் அணுகுண்டை!

 

நஞ்சை நெஞ்சுள் கொண்டோரின்

நாட்டை ஆளும் பேராசை

அஞ்ச வைக்கும் அகிலத்தை;

அவர்தம் கரத்தில் அணுகுண்டு!

 

வஞ்ச நெஞ்சம் கொண்டோரால்

வன்மு றைகள் வளர்ந்தோங்கும்;

அஞ்ச வைக்கும் அணுகுண்டை

அழித்து அமைதி காப்போம்வா!

 

அறிவை வளர்க்கும் அறிவியலை

அமைதிக் காகப் பயன்படுத்திச்

செறிவாய் மனித நேயத்தைச்

சிந்தை தன்னில் ஏற்றிடுவோம்!

கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை

 

 

 

 

 

 

 

Share