Home முந்தைய இதழ்கள் 2019 செப்டம்பர் 2019 தங்கத் தாத்தா!
சனி, 30 மே 2020
தங்கத் தாத்தா!
Print E-mail

தங்கத் தாத்தா


எங்க தாத்தா தங்கத் தாத்தா

எமக்கு வாய்த்த சிங்கத் தாத்தா

எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்து

எம்மைக் காத்த அன்புத் தாத்தா!

 

ஆடு மாடாய் வீழ்ந்து கிடந்த

அடிமை இனத்தை மீட்ட தாத்தா

நாடும் வாழ நாமும் வளர

நலமாய்த் தொண்டு செய்த தாத்தா!

 

கடவுள் ஆன்மா மோட்சம் நரகம்

கற்பனை என்று சொன்ன தாத்தா

மடமை இருளில் வீழ்ந்து கிடந்த

மனித இனத்தை மீட்ட தாத்தா!

- பொதட்டூர் புவியரசன்

 

Share