Home முந்தைய இதழ்கள் 2019 செப்டம்பர் 2019 தந்தை பெரியார்
ஞாயிறு, 08 டிசம்பர் 2019
தந்தை பெரியார்
Print E-mail

ஈரோடு ஈன்றெடுத்த

தலைவரவர்!

ஈடில்லா தியாகத்தில்

இமயமவர்!

மூடநம்பிக்கையை

ஒழித்த முன்னோடி!

முன்னேற்றப் பாதை

காட்டிய கண்ணாடி!

பெண்ணுரிமை பெற

பெரிதும் உழைத்தார்!

தள்ளாத வயதிலும்

தமிழ்நாடெங்கும்

சென்று களைத்தார்!

கோயிலுக்குள் சமஉரிமை

வேண்டும் என்றார்!

போராட்டக் களத்தில்

இறுதிவரை நின்றார்!

சுயமரியாதைத் திருமணத்தைச்

சட்டமாக்கச் செய்தார்!

திராவிடக் கொள்கைகளால்

தமிழர் மனத்தை நெய்தார்!

நலிவடைந்த சமுதாயத்தை

பொலிவுபெற வைத்தவர்!

- அ.உதயபாரதி

---------------------------------------------------------------------------------------------------

படிபடி தம்பி பெரியாரை...!

படிபடி தம்பி குறள்படி _ நூல்கள்

படிப்பதில் தேடிக் குறள்படி!

படிபடி தம்பி பெரியாரை _ சீர்மிகு

பகுத்தறி வான கருத்துகளை!

 

படிபடி தம்பி அண்ணாவை _ ஆட்சி

பாடப் புத்தகம் நமக்காகும்

படிபடி தம்பி காமராசரை _ ஏழையர்

படிக்க வைத்தவர் நம்மேதை!

- கவிச்சுடர் அழகுதாசன், கோவை

Share