Home முந்தைய இதழ்கள் 2019 செப்டம்பர் 2019 உலக நாடுகள் : கம்போடியா (CAMBODIA)
ஞாயிறு, 29 மே 2022
உலக நாடுகள் : கம்போடியா (CAMBODIA)
Print E-mail

சந்தோஷ்

அமைவிடமும் எல்லையும்:

*          கம்போடியா தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடாகும்.

*          மொத்தப் பரப்பளவு 1,81,034.99 ச.கி.மீ.

*     மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும். வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாமும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன.

புவியியல்:

*           தட்பவெப்பநிலை 100_380 செல்சியசு வரை மாறுபடும்.

*           தலைநகரம்: புனோம்பென்

*         கம்போடியாவின் தனித்த புவியியல் கூறாகத் திகழ்வது தொன்லே சாப் ஏரி, இந்த ஏரி வறண்ட காலத்தில் 2,590 சதுர கிலோ மீட்டர் பரப்பையும், மழைக்-காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோ மீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது.

மக்களும் மொழியும்:

*           மக்கள் ‘கம்போடியர்’ எனவும், கிமர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

*           கிமர் என்னும் குறியீடு, கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைப்பர்.

*           90 விழுக்காடு மக்கள் கிமர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

*           கிமர் மொழி நாட்டின் அலுவல் மொழி. பிரெஞ்சு இரண்டாவது மொழியாக பள்ளிகளில் பயிற்றுவிக்கப்-படுகிறது.

வரலாறு:

*           கம்போடிய நாகரிகம் கி.மு.முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது.

*           கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் அய்ந்தாம் நூற்றாண்டு வரை இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

*           இவ்வரசுகளின் வழியில் கிமர் நாகரிக மக்கள் புதிதாக கிமர் பேரரசை நிறுவினர்.

*           கிமர் பேரரசு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியை ஆட்சி செய்தது.

*           கிமர் பேரரசின் கீழ் அங்கோர் நகரம் தலைநகரமாக மாறியது. அங்கு உள்ள அங்கோர்வாட் கோவில் வளாகம் கிமர்களின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

*           கி.பி.1432இல் அண்டை நாடுகளுக்கிடையான நெடிய போர்களின் முடிவில் கிமர் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.

*           1863ஆம் ஆண்டு பிரான்சு உதவியுடன் கம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த மன்னர் நோரோடாம் அரசராகப் பொறுப்பேற்றார்.

*           மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயல்பட்டார். நாட்டினை வியட்நாமியர், சயாமியர் ஆதிக்கத்திலிருந்து மீட்டதால் கம்போடியாவின் நவீன அரசராகக் கருதப்பட்டார்.

*           பிரான்சு நாடு 1863 முதல் 1954 வரை கம்போடியாவின் பாதுகாப்பாளனாக இருந்தது. பின் 1954 நவம்பர் 9இல் பிரான்சு நாட்டிடமிருந்து கம்போடியா விடுதலை அடைந்தது.

*           1955ஆம் ஆண்டு இளவரசர் சிகானோவ் நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்குப் பின் 1960ஆம் ஆண்டு நாட்டின் தலைவரானார்.

*           சீனப் பொதுவுடைமைக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்ட கிமர் செம்படை பிரிவினர், நாட்டில் கம்போடியப் படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.

*           உள்நாட்டு போரில் தலையிட்ட அமெரிக்கா, ‘மெனு படை நடவடிக்கை’ என்னும் பெயரில் செயல்பட்டு கிமர் செம்படையை குண்டு வீச்சுகளால் முழுமையாகக் கட்டுப்படுத்த முயல்கையில் பல்லாயிரக்கணக்கான கிமர் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

*           எனினும், மக்கள் ஆதரவோடு செயல்பட்ட கிமர் படையினர் தோற்கடிக்க முடியாத படையாகச் செயல்பட்டனர். போர் 1975இல் முடிவுற்றது.

*           மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பெரும் அல்லல் உற்றனர். கிமர் செம்படைத் தலைவராக இருந்த போல் போட் புனோம், பென் நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றினர். நாட்டிற்கு ‘கம்பூச்சியக் குடியரசு’ என பெயரிட்டனர்.

*           உள்நாட்டில் வியட்நாமியர்கள் செயல்படுவது தொடர்ந்தது. வியட்நாம் போர் தொடுத்தது. பின் 1989ஆம் ஆண்டு முதன்முதலாக பாரிஸ் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 1991ஆம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதக் குறைப்பும் நடைமுறைக்கு வந்தது.

*           20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூக, அரசியல் என அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

*           கம்போடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அரசுமுறை:

*           மன்னர்: நொராடோம் சிகாமணி.

*           தலைமை அமைச்சர்: கின்சென்.

*           மன்னர் நாட்டின் தலைவர்.

*           மக்களாட்சி முறையில் பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவர்.

*           தலைமை அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர்.

*           தலைமை அமைச்சர் மன்னரால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் மூலம் நியமிக்கப்படுகிறார்.

*           தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

*           அரசியல் சாசனத்துக்கு உள்பட்ட முடியாட்சி.

பொருளாதாரம்:

*           நாணயம்: ரியெல்

*           அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுகிறது.

*           நெசவு மற்றும் ஆடை உற்பத்தித் துறை முதன்மையான ஏற்றுமதித் துறையாகப் பங்கு வகிக்கிறது.

*           சுற்றுலாத் துறை வருமானத்தை ஈட்டும் துறையாக அரசால் பார்க்கப்படுகிறது.

*           அரிசி, மீன், மரம், ஆடைகள், ரப்பர் முதலியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

*           ஆஸ்திரேலிய உதவியாலும், பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியாலும் கம்போடியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.

*           நாட்டில் நிலவும் ஊழல், பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக  வெளிநாட்டு முதலீட்டைத் தடுக்கின்றது.

பிற சுவையான தகவல்கள்:

*           நாட்டில் இயற்கை வளம் செறிந்து காணப்படுகிறது.

*           அரசின் கட்டுப்பாடின்றி காடழிப்பு நடைபெறுவது உலக அரங்கில் கவலையை ஏற்படுத்துகிறது.

*           உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் செயல்-படுகிறது.

*      நாட்டின் உயரமான மலைப் பகுதி ‘போனோம் ஆரோல்’ சுமார் 1,813 மீட்டர் உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

*           ஏலக்காய் மலை, யானை மலை, டென்கிரக் மலை ஆகியவை நாட்டின் இயற்கை வளம் மிகுந்த பகுதிகளாகும்.

*       ‘அங்கோர் வாட்’ என்னும் வழிபாட்டுத் தலம் தமிழ் மன்னர் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

*           தமிழ்நாட்டு மன்னர்கள் தொடர்பான ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் அங்கே காணப்படுகின்றன.

*           இங்குள்ள ஏரிகள் ‘தடாகம்’, ‘பேரேரி’ என்னும் தமிழ்ச்சொற்களால் அழைக்கப்படுகிறது தமிழக மன்னர்களின் தாக்கத்திற்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

சுற்றுலா இடங்கள்:

*           தாய்லாந்துக்கு அருகில் உள்ள ‘டங்கெக்’ மலைத்தொடர்கள்.

*           புன்னோம் பென்னிலுள்ள ராயல் அரண்மனை. இங்கு ‘சில்வர் பகோடா’ முற்றத்தின் புராண கால ஓவியங்கள் சிறப்பானவை.

*           ‘கோஹ் கேர்’ என்னும் தொல்பொருள் ஆய்வுத் தளம் ஆய்வாளர்களுக்கு முக்கியமானதாகும். இது ‘யுனெஸ்கோ’-வின் தற்காலிக உலக பாரம்பரியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

*           தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ‘டோனல்சாப்’ புகழ் பெற்ற ஒன்று. இந்த ஏரி யுனெஸ்-கோவின் உயிர்க்கோள வளாகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Share