Home முந்தைய இதழ்கள் 2019 டிசம்பர் 2019 செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி
புதன், 28 அக்டோபர் 2020
செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி
Print E-mail

வாசன்

தேவையான பொருள்கள்:

1.            சிறிது தடிமனான, சதுர வடிவ, ஏதாவது ஒரு வண்ணத்தாள்.

2.            கருப்பு நிற வரையெழுதுகோல் (Sketch pen)

செய்முறை:

1.            முதலில் வண்ணத்தாளை எடுத்து திருப்பி வைத்து, படம் 1இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை மடித்துக் கொள்ளவும்.

2.            பிறகு படம் 2இல் காட்டியபடி வலது பக்கம் பெரிய அளவிலும், இடதுபக்கம் சிறிய அளவிலும் மடித்து, அதன் A பக்கத்தை வெளிப்புறமாகவும், , B பக்கத்தை உட்புறமாகவும் மடிக்கவும்.

3.            இப்பொழுது தாளை சரிபாதியாக மேலிருந்து கீழ்புறமாக மடித்துக் கொள்ளவும்.

4.            இப்பொழுது படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை மேல்புறமாக (இரண்டு புறமும்) மடிக்கவும்.

5.            மீண்டும் அதை படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தில் கீழ்புறமாக (இரண்டு புறங்களிலும்) மடிக்கவும்.

6.            பிறகு படம் 6இல் காட்டியபடி அம்புக்குறியிட்ட உள்பகுதியை வெளியே இழுத்து விடவும்.

இப்பொழுது அருமையான நாய்க்குட்டி ரெடி. அதற்கு வரையெழுதுகோல் (Sketch pen)  உதவியுடன் கண், வாய், காது ஆகியவற்றை வரைந்துகொள்ளவும்.

செய்து அசத்துங்கள்! வாழ்த்துகள்!

பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

Share