குறுக்கெழுத்துப் போட்டி
Print

மேலிருந்து கீழ்

1.            கீழடி ______  நதிக்கரை நாகரிகம். (2)

2.            ஆங்கிலேயருக்கு எதிராக வ.உ.சிதம்பரனார் ______ ஓட்டினார். (4)

3.            அமெரிக்காவில் “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்” விருது பெற்ற முதல் தமிழர். இவரது பிறந்த நாள் டிசம்பர், 2. (4)

4.            “_____ மேகம்” மழைதரும். (திரும்பியுள்ளது) (2)

6.            “கடவுள் ______ கடத்தல் தடுப்பு பிரிவு” தமிழக காவல்துறையில் உள்ளது. (2)

8.            காதில் அணியும் அணிகலன். (திரும்பியுள்ளது) (4)

10.          ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்தினான் ஜெனரல் ______. (3)

12.          ஆத்திச் சூடி எழுதிய பெண் கவிஞர் (3)

13.          “மாதர் தம்மை இழிவு செய்யும் ______யைக் கொளுத்துவோம்!’’ (3)

14.          இசைஞானி இளையராஜா இன்னிசையால் நமக்குத் தருவது ______ (3)

17.          தமிழ்நாட்டின் மான்செஸ்டர் ______ (2)

இடமிருந்து வலம்

1.            கேரளாவில் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்காக நடந்த மனித உரிமைப் போரில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதால் தந்தை பெரியார் இவ்வாறு அழைக்கப்பட்டார். (7)

5.            தந்தை பெரியார், தம் தந்தையிடம் கோபித்துக்கொண்டு இளம்வயதில் இந்த ஊருக்குச் சென்றார். (2)

7.            நாடக உலகில் தனிமுத்திரை பதித்தவர் ______ சம்பந்தம். (4)

9.            தமிழர்கள் ______ தாண்டி வணிகம் செய்து வாழ்ந்தவர்கள். (3)

11.          அசுரன் திரைப்படம் எழுத்தாளர் ______ யின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது (திரும்பியுள்ளது.) (3)

14.          இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ______ பட்டேல். (4)

15.          “கற்க ______ ற” (3)

16.          திராவிடர் இயக்கத்தின் போர்வாள் என அழைக்கப்படுபவர் (2)

18.          கடிதம் _ வேறு சொல் _ (திரும்பியுள்ளது) (3)

19.          அம்மை நோய் ______ கிருமியால் உண்டாகிறது. (3)

- பெரியார் குமார்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள்

பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.!

 

Share