Home 2011 ஜனவரி விடுகதைகள்
ஞாயிறு, 04 ஜூன் 2023
விடுகதைகள்
Print E-mail

1.    தண்ணீரில் மிதக்கும், கப்பல் அல்ல. கனமாக இருக்கும், கல்லும் அல்ல. வெயிலில் உருகும், வெண்ணெயும் அல்ல. அது என்ன?

2.    பாலில்லாமல் பருக்கிறது. நோயில்லாமல் இளைக்கிறது. அது என்ன?

3.    இருட்டுக்குச் சொந்தக்காரன். எழுந்து சுற்றுவான். ஓரிடத்தில் உட்காராமல் தலைகீழாய்த் தொங்குவான். அவன் யார்?

4.    நிலத்தில் வரும், நீரில் வரும், தவளையன்று. நீட்டிய தன் தலையினை இழுக்கும், நத்தையன்று. பலத்த ஓர் ஓடிருக்கும், தேங்காய் அன்று. பாய்ந்து வர முடியாது, பாம்பும் அன்று. அது என்ன?

5.    முள்ளு முள்ளுக்குள்ளே முந்திரித் தோப்புக்குள்ளே வைக்கோல் போருக்குள்ளே கண்டெடுத்தேன் வைரமணி. அது என்ன?

6.    இறக்கை உண்டு. பறக்க முடியாது. அது என்ன?

7.    இரண்டு தட்டுக்காரியவள். எப்போதும் நியாயம் பேசுவாள். அவள் யார்?

8. உயிர் இல்லை, ஊரைச் சுமப்பான். பேச்சு இல்லை, பெருமூச்சு விடுவான். அவன் யார்?

9. நீரில் பிறந்தபோது வாலுண்டு. நிலத்துக்கு வந்தபோது வாலில்லை. அது என்ன?

10. நான்கு கால் பிள்ளையின் நடுவயிற்றில் உட்கார்ந்தால் ஆடாது அசையாது அலறித் துடிக்காது. அது என்ன?

 

விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

Share