Home 2011 ஜனவரி பிஞ்சுகள் பக்கம்
வெள்ளி, 09 ஜூன் 2023
பிஞ்சுகள் பக்கம்
Print E-mail

கடிக்கிறாங்க

1. ஆசிரியர்: மரத்தில் உள்ள இலைகள் கீழே வி-ழுந்தன!
இது என்ன காலம்?

மாணவன்: இது இலையுதிர் காலம் சார்!

2. ஒருவர்: என்ன அந்த மேடம் ரொம்ப மெதுவா நடந்துபோறாங்க?

இன்னொருவர்: அவங்க சுலோச்சனா வாச்சே!

தொகுப்பு: ஷி. தணிகை வேல், தி.மலை

அணிலுக்கும், ஆமைக்கும் லெட்டர் போட்டா யாருக்கு முதல்ல போய்ச் சேரும்?
தெரியலையே!

அணிலுக்குத்தான், ஏன்னா பின்கோடு இருக்கே


நீங்க இனிமேல் சிலப்பதிகாரத்தைப் படிக்கமாட்டீங்களா, ஏன்?

டாக்டர் என்னை, காரம் சேர்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்.


அது என்ன நாய்?

போலீஸ் நாய்
பார்த்தால் அப்படித் தெரியவில்லையே?
அது மப்டியில் இருக்கு.


மூளை!

  • அறிவுக்கும் மூளையின் எடைக்கும் சம்பந்தம் இல்லை.

  • மனித மூளையின் எடை மொத்த எடையில் 2%

  • சராசரியாக ஆணின் மூளையைவிட பெண்ணின் மூளை 10% எடைகுறைவு.

  • மனித மூளையின் வளர்ச்சி 20 வயதுடன் நிறுத்தப்படுகிறது.


    வேகம்.... வேகம்...

  • மனிதன் பேசும் வேகம் நிமிடத்துக்குச் சுமார் 100 வார்த்தைகள்.

  • மனிதனின் கேட்கும் வேகம் நிமிடத்துக்குச் சுமார் 500 வார்த்தைகள்.

  • உடல் உறுப்புக்குச் செய்தி அனுப்பும் வேகம் மணிக்கு 320 கி.மீ.

  • வேகமாக இருமும்பொழுது வெளிப்படும் வேகம் மணிக்கு 392 கி.மீ. -



    மு.ஹ.அபூபக்கர்
    தூத்துக்குடி மாவட்டம்
Share